இரத்த தானத்தில் அகில இலங்கை ரீதியாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு (SLTJ) முதலிடம்






இலங்கையில் அதிகமாக இரத்த தானம் செய்ததின் மூலம் இரத்த தானம் வழங்கும் அமைப்புகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு முதல் இடம் கிடைத்தது - அல்ஹம்து லில்லாஹ்.



உலக இரத்த தானம் வழங்குவோர் தினத்தை முன்னிருத்தி “இலங்கை இரத்த வங்கி” மற்றும் “சுகாதார அமைச்சும்” இணைந்து இலங்கையில் அதிகமாக இரத்த தானம் செய்த தனி நபர்கள் மற்றும் இயக்கங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வை இன்று கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் இலங்கை மட்டத்தில் அதிகமான இரத்த தான முகாம்களை நடத்தியதன் மூலம் 3000 ஆயிரத்திற்கு அதிகமானவர்களை இரத்த தானம் செய்ய வைத்த முதன்மை அமைப்பாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெரிவு செய்யப்பட்டது.

இதற்கான விருது மற்றும் சான்றிதழை ஜமாத் சார்பாக ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள், சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இலங்கையில் இனவாதம் பரப்பப்படும் இந்த சூழலில் இலங்கையின் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்களின் சமுதாய பேரியக்கமான ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு இரத்த தானத்திற்கான முதல் இடம் கிடைத்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger