JUNE 14TH, 2014
சீனாவில் நூடுல்ஸ் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் கீழே கொட்டிக்கிடக்கும் நூடுல்ஸ் மீது அங்கு பணிபுரிபவர்கள் வெறுங்காலுடன் நடந்து செல்வதையும், நூடுல்ஸ் மேல் ஒருவர் படுத்து தூங்குவதையும் சீன புலனாய்வு பத்திரிகை ஒன்று படம் பிடித்து தங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளது. இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகமெங்கிலும் மக்கள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ், சிறந்த சுகாதாரமான இடங்களில் தயாராகிறது என்று நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தால் அது மாபெரும் தவறு என்பதை நேற்று சீனாவில் நடந்த ஒரு சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
சீனாவில் உள்ள Tongcheng Rice Noodle Factory என்ற நூடுல்ஸ் தொழிற்சாலையில் ஏராளமான நூடுல்ஸ் தயாராகி அவற்றை பேக்கிங் செய்வதற்காக ஒரு அறையில் குவித்து வைத்துள்ளனர். அந்த அறைக்கு செல்லும் அந்நிறுவன ஊழியர்கள் வெறுங்காலுடன் நூடுல்ஸ் மேல் மிதித்து செல்கின்றனர்.
ஒரு ஊழியர் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நூடுல்ஸ் மேல் படுத்து தூங்குகிறார். இவ்வாறு சுகாதாரமற்ற நூடுல்ஸ்தான் பாக்கெட்டில் விற்பனையாகிறது. அதை சாப்பிடும் நம் உடல் என்ன கதிக்கு ஆளாகும் என்பதை கொஞ்சம் நினைத்து பார்த்தால், இனிமேல் யாரும் நூடுல்ஸை கையால் தொடக்கூட மாட்டார்கள்.
Tongcheng Rice Noodle Factory நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு குறைந்தது பத்து வருட ஜெயில் தண்டனை கிடைக்கும் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment