இனவாத யுத்தத்தை ஆரம்பித்துள்ளது அரசு – மங்கள சமரவீர குற்றச்சாட்டு..!!

 

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக காவியுடை அணிந்தவர்களை பயன்படுத்தி அரசாங்கம் அளுத்தகம பகுதியில் நடத்தியமை இனவாத யுத்தம் என்பது தெட்ட தெளிவாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுபல சேனா என்ற அமைப்பு அரச பாதுகாப்பின் கீழ், அளுத்கம மற்றும் பேருவளை நகரங்களில் மூன்று பேரை கொலை செய்து, பாடசாலைக்கு செல்லும் சிறுவனின் காலை உடைத்து, கடைகள் மற்றும் வீடுகளை தீயிட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பு என்பது அரச புலனாய்வுப் பிரிவினரால் வழிநடத்தப்படும் அமைப்பாகும். அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் என்பவர் பௌத்த பிக்குவா என்பது சந்தேகத்திற்குரியது.
அரச புலனாய்வுப் பிரிவினரால் வழிநடத்தப்படும் நபர்களின் பெயர் பட்டியல்களை எதிர்வரும் நாட்களில் ஊடகங்களுக்கு தரப்படும். புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்களும் பொதுபல சேனா அமைப்பில் இருக்கின்றனர்.
அளுத்கமவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இனவாத யுத்தம் பதுளை வரை பரவியுள்ளது. பதுளை நகரில் இதுவரை மூன்று கடைகள் தீயிடப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியவர்களுக்கு அங்கு சென்ற பாதுகாப்பு தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கினர். அவர்கள் அதனை தடுக்க முயற்சிக்கவில்லை.
பொதுபல சேனா அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தை போல் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமோ ஐக்கிய தேசியக்கட்சியோ நடத்தியிருந்தால், அதனை அடக்கி ஒடுக்கியிருப்பார்கள் என்றார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger