அளுத்கமை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென குற்றம் சாட்டும் ஐ.தே.கட்சியின் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களான அசாத் சாலி, பைரூஸ் ஹாஜி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர், பொதுபல சேனா சட்டத்தை தனது கையிலெடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக பிரயோகிப்பதை தடுக்காது அரசாங்கம் மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார்.
கொழும்பு 7 பிளவர் வீதியில் உள்ள அதிகாரத்தை பரவலாக்கி நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு கூட்டாக அறிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத்சாலி;
பொது பல சேனா அமைப்பு இரண்டு வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொது பல சேனா அமைப்பு இரண்டு வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர்.
அதன் உச்சக்கட்டமாக இன்று அளுத்கம தர்கா நகர் உட்பட பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்களின் உடைமைகள் சேதமாக்கப்பட்டு உயிர்கள் பறிக்கப்பட்டு பொதுபலசேனாவின் அடாவடித்தனம் தாண்டவமாடுகிறது. ஆனால் அரசாங்கம் இறுதி வரையில் இது தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை. எந்தவொரு பொறுப்பு வாய்ந்த அமைச்சரும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை நேரில் சென்று பார்க்கவில்லை.
விடுதலைப் புலிகளை விட மிக மோசமாக பொதுபலசேனா தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
நாட்டில் அரசாங்கம் ஒன்று இருக்கிறதா ஆட்சியாளர்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் இன்று எழுந்துள்ளது.
பொதுபல சேனாவின் அடாவடித்தனங்களை பார்த்துக் கொண்டு அரசாங்கம் மௌனம் காக்கிறது.
எனவே, இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும்
Post a Comment