அளுத்கம சம்பவத்திற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – நவிபிள்ளை..!!

 

அளுத்கம வன்முறை சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மேலும், இந்த சூழ்நிலையில் வெறுப்பை உருவாக்கும் பேச்சை தடுக்க வேண்டும் என்றும் அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையர் தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
ஏனைய முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்களுக்கும் இந்தமாதிரி வன்செயல்கள் பரவலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger