அமெரிக்காவின் அதி பயங்கர பழிவாங்கல் ஆரம்பமாகலாம் ? பரபரப்பு தகவல் !


ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளாக பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரரை மீட்பதற்காக, கைதிப் பரிமாற்றம் மூலம் விடுவிக்கப்பட்ட 5 தலிபான் தளபதிகளும், சி.ஐ.ஏ.வின் உளவு விமான ஏவுகணை தாக்குதலில் கொல்லப்படவும் சான்ஸ் உள்ளது என தெரிவித்துள்ளார், அமெரிக்க உள்துறை செயலாளர், ஜான் கெரி. அமெரிக்கா விடுவித்துள்ள 5 பேர்களையும் அவ்வளவு சுலபகாக எப்படி கண்டுபிடிக்க முடியும் ? அக்பானிஸ்தானில் உள்ள மலை, குகை, பள்ளத்தாக்கு என்று அவர்கள் எங்குவேண்டும் என்றாலும் ஒளிந்துகொள்ளலாம் அல்லவா ?

ஆனால் அமெரிக்காவில் பிடியில் அவர்கள் இருந்தவேளை அவர்களுக்கே தெரியாமல், ரிராக்கிங் சிப் ஒன்றை, சி.ஐ.ஏ அவர்கள் உடலில் செலுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அது வெளியிடும் சிக்னலை வைத்தே அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் இப்படியான வேலைகளை அமெரிக்கா செய்திருக்கும் என்று தலிபான்களுக்கும் தெரியும். அவர்களும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 பேரையும் மிகக் கவனமாக பரிசோதித்திருப்பார்கள். இருப்பினும் அமெரிகக கூறியுள்ள கருத்தை எவரும் அவ்வளவு சுலபமாக உதாசீனம் செய்துவிட முடியாது. “தீவிரவாதிகளுடன் நாம் (அமெரிக்கா) பேரம் பேசுவதில்லை” என ஒரு புறமாக கூறிக்கொண்டு, மறுபுறமாக பேரம் பேசி முடிக்கப்பட்ட டீல் இது. இதற்கு அமெரிக்கா விடுத்துள்ள ஒரேயொரு நிபந்தனை, விடுவிக்கப்படும் 5 தலிபான் தளபதிகளும்,

கத்தார் நாட்டில் தங்கியிருக்கலாம். அதாவது, கத்தாரில் சுதந்திரமாக தங்கியிருக்கலாம். ஆனால், கத்தாரை விட்டு வெளியேறக் கூடாது. இதில் பெரிய தமாஷ் என்னவென்றால், அவர்கள் கத்தார் நாட்டில் அவர்கள் கைதிகள் அல்ல. வீட்டுக் காவலிலும் இல்லை. நினைத்தால், நொடிப் பொழுதில் அங்கிருந்து மறைந்து விடுவார்கள். அவர்களை தடுப்பதற்கு இவர்களுக்கு எந்த வழியும் இல்லை. ஆனால் விடுதலையானவர்கள் கத்தார் நாட்டில் தான் தற்போதும் உள்ளார்களா என்பது கூட இதுவரை சரியாகத் தெரியவில்லை. இன் நிலையில் தான் கெரியின் அறிவித்தலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger