நீங்கள் ஐபோன் பாவிப்பவரா ? அமெரிக்காவின் அடுத்த குட்டு அம்பலம் : பரபரப்பு தகவல் !




அமெரிக்காவிடம் FBI , CIA என்று பல உளவு நிறுவனங்கள் உள்ளது யாவரும் அறிந்ததே. இந்த வகையில் என்.எஸ்.ஏ(NSA) national security agency என்ற உளவு நிறுவனமும் அமெரிக்காவில் இயங்கிவருகிறது. இன் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் உரையாடல்களை ஒட்டுக்கொட்டு வருகிறது. இன் நிறுவனம் பாரிய தொழில் நுட்ப்ப வளர்சியடைந்துள்ளது. இவர்களால் உலகில் எந்த ஒரு மூலை முடுக்கிலும் உள்ள நபரின் மோபைல் தொலைபேசியை ஒட்டுக்கேட்க்க முடியும். ஆனா குறித்த நபரின் மோபைல் இலக்கம் மட்டும் தெரிந்தால் போதும். சரி இது சாதாரண விடையம் தானே என்று பலரும் நினைக்கலாம். ஆனால் மேலும் அதிர்சி தரும் தகவல் ஒன்று கூட உள்ளது. அதாவது ஆப்பிள் ஐபோன்களை பாவிக்கும் நபர்களை இன் நிறுவனம் மிகவும் சுலபமாக ஒட்டுக்கேட்டு வருகிறது.

குறித்த நபர் ஒரு முக்கியமான ஆட்களை சந்திக்கும்வேளை தனது ஆப்பிள் ஐபோனை ஆப்(switch off) செய்து வைத்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வேம். நான் என்ன நினைப்போம் ? மோபைல் போன் ஆப்(OFF) ஆகிவிட்டது என்று. ஆனால் ஆப்பிளை பொறுத்தவரை நீங்கள் போனை சுவிஜ் ஆப் செய்தால் கூட, போனில் உள்ள மைக்(MIC) (குரல் உள்வாங்கி) ஆக்டிவாக தான் இருக்குமாம். இதனூடாக நீங்கள் போனை சுவிஜ் ஆப் செய்தால் கூட, நீங்கள் உரையாடுவதை NSA வால் ஒட்டுக்கேட்க்க முடியும் என்று, சமீபத்தில் இன் நிறுவனத்தில் வேலைபார்த்து பின்னர் தப்பிச் சென்று ரஷ்யாவில் அடைக்கலம் தேடியுள்ள எட்வேட் ஸ்னோடன் தெரிவித்துள்ளார். இக் கருத்தை பலர் நம்பவில்லை. இது பொய் என்று பலர் கூறினார்கள்.

சில முன்னணி கம்பெனிகள் (NOKIA போன்ற நிறுவனங்கள்) இக்கூற்று உண்மையா என்று ஆராய பெரும் பணத்தைக் கொட்டி ஆராட்சிகளை மேற்கொண்டார்கள். முடிவுகள் பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ! எட்வேட் சொன்னது 100 விகிதம் சரியே. ஆப்பிள் ஐபோனை நீங்கள் சுவிஜ் ஆப் செய்தால், அது முற்றிலுமாக ஆப் ஆகாது, என்று கண்டுபிடித்துள்ளார்கள். HOME பட்டனையும் சுவிஜ் ஆப் பட்டனையும் ஒன்றாக அழுத்தி பின்னர் HOME பட்டனை,, மெதுவாக விட்டால் தான் அது முற்றிலுமாக ஆப் ஆகிறது என்று கூறுகிறார்கள். இதனால் ஆப்பிள் ஐபோன் பாதுகாப்பற்ற ஒரு மோபைல் போன் என்று அதன் போட்டி நிறுவனங்கள் தற்போது விளம்பர யுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். நாட்டின் தலைவர்கள், அரசியல்வாதிகள், ராஜதந்திரிகள் மற்றும் செல்வந்தர்கள் தற்போது ஆப்பிள் ஐபோனை பாவிக்கவேண்டுமா என்று நினைக்கும் அளவு நிலமை மோசமாக மாறிவிட்டது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger