பொதுபல சேனா சில சந்தர்ப்பங்களில் பிற மதங்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரண தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான செயல்கள் தொடர்பில், சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் சட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment