தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் அரசாங்கம் அரசியல் நடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால் நாடு பாரியளவில் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி நேற்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு வீசா வழங்கப் போவதி;ல்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமென சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கும் பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டுமொருமுறை தேசின இனப் பிரச்சினையை அரசியல் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதித்தாலும் இல்லாவிட்டாலும் விசாரணைகள் நடத்தப்படும் என்பதனை அரசாங்கம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.
சர்வதேச விசாரணைகளை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான எந்தவொரு முனைப்பையும் அரசாங்கம் எடுக்காமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச ரீதியான அழுத்தங்களையும் சவால்களையும் எதிர்நோக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தேசியவாத முகமூடிக்குள் மறைந்து பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பி;ள்ளையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவிற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த விசாரணகை;குழு தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் சகல முயற்சிகளுக்கும் முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
Post a Comment