நைஜீரியாவில் பொதுமக்களை கொன்று குவிக்கும் ‘போகோஹரம்’ தீவிரவாதிகளை ஒழிக்க ராணுவத்துக்கு அதிபர் குட்லக் ஜோனாதன் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து போர்னோ மாகாணத்தில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
பியூநகரில் ஒரு பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் துப்பாக்கியால் சுட்டது. அதை தொடர்ந்து தீவிரவாதிகள் பதிலுக்கு சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
அதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவன் உயிருடன் பிடிப்பட்டான். அதே போன்று புரூடாய், கவூரி ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் முபி என்ற இடத்தில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து அச்சம் பவத்தில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
Post a Comment