மத்திய ஆபிரிக்க குடிரசின் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முதல்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக அந்த நாட்டின் தலைவகர் பங்குயிவில் இருந்து 800 கனேடியவர்களை வானூர்திகள் மூலம் அனுப்பவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 33 ஆயிரம் ஆபிரிக்கர்களுக்கு உதவிகள் தேவைப்படுவதாக அந்த நாட்டு குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த நாட்டில் கிறிஸ்த்தவ மற்றும் முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜொடோடியா நேற்று பதவி விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment