புதிய கூட்டமைப்புத் தொடர்பான முதலாவது கலந்தாய்வுக் கூட்டம் நல்லூரினில் இன்று இடம்பெற்றிருந்த போதும் நீண்ட இழுபறிகளுடன் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஈபிடிபி சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டிந்தனர்.
தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் அதன் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியும் சிறீடெலோ சார்பினில் அதன் செயலாளர் நாயகம் உதயராசா மற்றும் யாழ்.மாவட்ட அமைப்பாளர் செந்தூரன் ஆகியோருடன் பத்மநாபா அணியின் செயலாளர் நாயகம் சுகு சிறிதரன் ஆளும் ஜக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் வடக்கு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்த தமிழழகன் உள்ளிட்டவர்கள் பங்கெடுத்திருந்தனர்.
நீண்ட நேரம் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த போதும் சொல்லிக்கொள்ளத்தக்கதாக முடிவேதும் எட்டப்பட்டிருக்கவில்லையென தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன. எனினும் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதன் மூலம் ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துவதெனவும் முடிவு செய்யபட்டுள்ளது.

Post a Comment