முதல்–அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: தி.மு.க. பேச்சாளர் இளம்பரிதி மீது போலீசார் அவதூறு வழக்கு


சென்னை ஏழுகிணறு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க. தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில், தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்களில் ஒருவரான இளம்பரிதி பங்கேற்று பேசினார். அப்போது அவர், தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு நிலைமை பற்றியும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பற்றியும் அவதூறாக பேசியுள்ளார்.

இதுபற்றி ஏழுகிணறு போலீசார், 294 பி (அவதூறாக பேசுதல்), 505 (உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசுதல்) ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கில் இவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க.வில் இருந்து விலகி சமீபத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்த பரிதி இளம் வழுதியின் மகனான, இளம் பரிதி அயனாவரத்தில் நடந்த கூட்டம் ஒன்றிலும், முதல்–அமைச்சரை பற்றி அவதூறாக பேசினார்.

இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் அயனாவரம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இளம்பரிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger