முள்ளியவாய்க்கால் பேரவலத்தை ஞாபகப்படுத்தி தேர்தலில் வாக்குப் பெற்றுவிட்டு முல்லைத்தீவை புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம்?நாளைய தினம் ஆர்பாட்டம்.
நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
போனஸ் ஆசனங்கள் உட்பட 30 ஆசனங்களை பெற்றுள்ளது .
இந் நிலையில் வடமாகாணசபைக்குரிய நான்கு அமைச்சுப் பதவிகளையும் கட்சி அடிப்படையா அல்லது மாவட்ட அடிப்படையிலா வழங்குவதா என்ற குழப்ப நிலையானது கட்சிக்குள் காணப்பட்டது .
தமிழரசுக்கட்சி இரண்டு அமைச்சுக்களை தனது கட்சியைச் சேர்ந்த கிளிநொச்சி , வவுனியா ஆகிய உறுப்பினர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ள நிலையில் , எஞ்சிய இரு அமைச்சுக்களில் ஒன்று மன்னாருக்கும் மற்றது யாழிற்கும் வழங்கப்படவுள்ளது .
இதனால் இறுதி யுத்தத்தில் வெகுவாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விடுபட்டுள்ளது .
முள்ளியவாய்க்கால் பேரவலத்தை ஞாபகப்படுத்தி தேர்தலில் வாக்குப் பெற்றுவிட்டு முல்லைத்தீவை புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம் எனக் கூறி முல்லை மக்கள் நாளைய தினம் ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளனர் .
மன்னார் மாவட்டம் ஒதுக்கப்பட்டால் கூட்டமைப்புக்கு எதிராக போராட்டம் வெடிக்கும். கூட்டமைப்பு ஆதரவாளர்கள் எச்சரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபை அமைச்சர் பதவி தெரிவில்
மன்னார் மாவட்டத்தை ஒதுக்கி விடுமாகில் வீதியில் இறங்கிப் போராடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர் .
வட மாகாண சபையை அதிக பெரும் உறுப்பினர்களைக் கொண்டு ஆட்சி அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வட பகுதி மக்கள் அனைவரும் குறிப்பாக ஐந்து மாவட்ட தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஆதரவளித்துள்ளனர் .
அதேவேளையில் , ஆட்சி அமைப்பதற்கு தயார்படுத்தும் கூட்டமைப்பு , ஆதரவளித்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர் பதவிகளை பகிர்ந்துகொடுப்பதன் மூலம் அம்மாவட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையும் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விசுவாசமும் ஏற்படும் .
ஆனால் , அமைச்சர் பதவியில் மன்னார் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது . இதனால் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய விளைவைச் சந்திக்க வேண்டி வரும் .
எனவே , ஒட்டுமொத்தமாக வடபகுதி மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறவைத்து உலகத்திற்கு ஒற்றுமையை காண்பித்திருக்கும் இவ்வேளையில் , மன்னார் மாவட்ட தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்ட செயலால் வீதியில் இறங்கி போராட முயலும்போது வெளிநாட்டு , உள்நாட்டு சமூகங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவப்பெயர் உருவாகாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன் ஆதரவா ளர்கள் கேட்டுள்ளனர் .
Post a Comment