A
ug. 11 Comments
Off
மோலவத்தை பள்ளிவாயல் தொடர்பாகவும், கொழும்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும்
இலங்கை முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுவார்தை சற்று முன்னர் அமைச்சர்
பௌசியின் வீட்டில் வைத்து நடைபெற்றது.
இதில் ஜமாத்
சார்பாக ஜமாத்தின் தலைவர் ஆர்.எம் ரியால் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் துணை
செயலாளர் ரஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதில்
அமைச்சர்கள் சார்பாக அமைச்சர்களான பௌசி, ரிஷாத்
பதியுத்தீன், நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ், பைசல் முஸ்தபா, ஆளுனர் அலவி
மௌலான மேல் மாகான சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீன் உள்ளிட்ட இன்னும் சில
பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.
SLTJ நிர்வாகத்தை சந்தித்த
அமைச்சர் ரிஷாத்.
கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயலை பார்ப்பதற்காக அவ்விடத்திற்கு வந்த அமைச்சர் ரிஷாத்
பதியுத்தீனிடம் பேசிய ஜமாத்தின் நிர்வாகிகள் எக்காரணம் கொண்டும் அந்த
இடத்திலிருந்து பள்ளியை அகற்ற முடியாது என்று தெளிவாக தெரிவித்தது.
அதன் பின்
ஜமாத்தின் தலைவர் செயலாளர் மற்றும் துணை செயலாளர் ஆகியோரை அழைத்துக் கொண்டு மற்ற
அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் ரிஷாத் விரைந்தார்.
மோலவத்தை
பள்ளிவாயல் தொடர்பாகவும், கொழும்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் இலங்கை முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இடையிலான
பேச்சுவார்தை சற்று முன்னர் அமைச்சர் பௌசியின் வீட்டில் வைத்து நடைபெற்றது.
இதில் ஜமாத்
சார்பாக ஜமாத்தின் தலைவர் ஆர்.எம் ரியால் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் துணை
செயலாளர் ரஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதில்
அமைச்சர்கள் சார்பாக அமைச்சர்களான பௌசி, ரிஷாத்
பதியுத்தீன், நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ், பைசல் முஸ்தபா, ஆளுனர் அலவி
மௌலான மேல் மாகான சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீன் உள்ளிட்ட இன்னும் சில
பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.
SLTJ நிர்வாகத்தை சந்தித்த
அமைச்சர் ரிஷாத்.
கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயலை பார்ப்பதற்காக அவ்விடத்திற்கு வந்த அமைச்சர் ரிஷாத்
பதியுத்தீனிடம் பேசிய ஜமாத்தின் நிர்வாகிகள் எக்காரணம் கொண்டும் அந்த
இடத்திலிருந்து பள்ளியை அகற்ற முடியாது என்று தெளிவாக தெரிவித்தது.
அதன் பின்
ஜமாத்தின் தலைவர் செயலாளர் மற்றும் துணை செயலாளர் ஆகியோரை அழைத்துக் கொண்டு மற்ற
அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் ரிஷாத் விரைந்தார்.
SLTJ யின் கோரிக்கை ஏற்பு.
ஸ்ரீ லங்கா
தவ்ஹீத் ஜமாத் அமைச்சர்களிடம் வைத்த கோரிக்கை எக்காரணம் கொண்டும் பள்ளியை குறித்த
இடத்தை விட்டு அகற்றக் கூடாது. சட்டப்படி பதியப்பட்ட பள்ளியை அகற்ற யாருக்கும்
அதிகாரம் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்தார்கள்.
இதனை ஏற்றுக்
கொண்ட அமைச்சர்கள் அனைவரும் ஜனாதிபதியிடம் இது தொடர்பில் தாம் தெளிவாக
எடுத்துறைப்பதாகவும் பள்ளியை அகற்றக் கூடாது என்ற ஜமாத்தின் முடிவில்
அமைச்சர்களும் உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
இறுதி நம்பிக்கை.
அப்போது
அமைச்சர்களிடம் பேசிய ஜமாத்தின் நிர்வாகிகள் இதுதான் முஸ்லிம் அமைச்சர்களை
சமுதாயம் நம்பும் இறுதி நேரமாகும். இதன் பின்னரும் நீங்கள் முஸ்லிம்களுக்காக குரல்
கொடுக்காவிட்டால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இதனை மக்கள் மன்றில் எடுத்துச்
சொல்வதற்குத் தயங்காது என்பதையும் தெளிவாகத் தெரிவித்தார்கள்.
தற்போது
அமைச்சர்கள் புத்த விவகார அமைச்சில் பேச்சுவார்த்தை நடத்திக்
கொண்டிருக்கின்றார்கள்.
Post a Comment