நேற்றைய தினம் முதல் இன்று வரை இனவாதிகளினால் தாக்கப்பட்ட கிரேன்ட்பாஸ் பள்ளி வாசல் பிரச்சினை முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்களின் கழுத்தறுப்பின் மூலம் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும் என்பதே இனவாதிகளின் கோரிக்கை. உயிரே போனாலும் பள்ளியை அகற்ற மாட்டோம் என்பது களத்தில் இருந்து மக்களை வழிநடாத்திய ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினரின் முடிவு.
இரு நாட்களாய் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் எடுத்த முடிவில் இறுதி வரை ஜமாஅத் உறுதியாக இருந்தது. ஆனால், சிங்கள ராவய , சிங்கள ராவண மற்றும் ஹெல உருமய போன்ற இனவாத அமைப்புகளின் கோரிக்கைக்கு அடிபனிந்து முஸ்லிம் தலைவர்கள் இந்நாட்டில் தங்களது 25 வது பள்ளிவாசலையும் பரிகொடுத்துள்ளனர்.
பிரச்சினைக்குறிய பள்ளியை மூடி விட்டு, பக்கத்தில் அமைந்திருக்கும் பழைய பள்ளியை பாவிப்பதாக பள்ளி நிர்வாகமும், ஜம்இய்யதுல் உலமாவும் இணங்கியுள்ளது. இவர்களின் இம்முடிவை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதோடு, முஸ்லிம் சமூகத்துக்கு செய்த மிகப்பெறும் துரோகமாகவும் கருதுகிறது.
தம்புள்ளை முதல் கிரேன்பாஸ் வரை அனைத்து பள்ளிகளும் கை நழுவிச் செல்வதற்கு அடிப்படை காரணம் இ.வர்கள் போன்ற நயவஞ்சக தலைவர்களே என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரி!
Post a Comment