தயவு செய்து எங்களை தடுக்காதீர்கள். போராட விடுங்கள்.




கொழும்பு, கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயலை எக்காரணம் கொண்டும் மூடவோ அகற்றவோ கூடாது என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்தும் கோரிக்கை வைத்து போராடி வருகின்றது.
இதே நிலைபாட்டில் இன்று காலை சுமார் 11.30 க்கு மோலவத்தை பள்ளியின் அருகில் நமது ஜமாத் தலைவர் ஆர்.எம். ரியால் செயலாளர் அப்துர் ராசிக் துணை செயலாளர் ரஸ்மின் ஆகியோர் சென்றார்கள்.
அப்போது அங்கு பேச்சுவார்த்தைக்காக கூடியிருந்த பள்ளிவாயல் சம்மேளனத்தை சேர்ந்தவர்களும், முஸ்லிம் சட்டத்தரணிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்போது தாக்கப்பட்ட பள்ளியை விடுத்து வேறு ஒரு இடத்திற்கு பள்ளியை இடமாற்றுவதற்கு உடன்படும் விதமாக அங்கிருந்தவர்கள் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அனுமதியுடன் குறுக்கிட்ட ஜமாத்தின் செயலாளர் அப்துர் ராசிக் அவர்கள் பள்ளியை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் இத்துடன் இலங்கையில் சுமார் 24 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளது. இவற்றை இப்படியே பொருத்துக் கொண்டிருக்க முடியாது என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்ட பள்ளிவாயல் சம்மேலத்தின் நிர்வாகிகள் இது எங்கள் பள்ளி நாங்கள் பார்த்துக் கொள்வோம் நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று கூச்சலிட்டு, எமக்கு தாக்க முற்பட்டதுடன், நம்மை அந்த இடத்தை விட்டும் வெளியேற்றினார்கள்.
வெளியே வந்த நம்மை சந்தித்த அமைச்சர் ரிஷாத் நமது ஜமாத் நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு அமைச்சர்களுடன் இது தொடர்பாக பேச்சு நடத்துவற்காக சென்றார்.

அன்பான வேண்டுகோள்.
அன்பின் பள்ளிவாயல் சம்மேளனத்தினரே, தப்லீக் சகோதரர்களே! நாங்கள் தப்லீக் பள்ளி தவ்ஹீத் பள்ளி என்று பிரித்துப் பார்த்துப் போராடவில்லை. உங்கள் பள்ளிக்காகவும் போராடுவதற்காக நாம் தயாராக வந்திருக்கின்றோம்.
ஆகவே உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள். என்பதே நமது பணிவான வேண்டுகோள்.

Share this article :

+ comments + 1 comments

Anonymous
August 11, 2013 at 2:47 PM

Salame..onec i was SLTJ Member,let me tell you some thing before going solve other mosque problems..first of all you should stop opening new mosque in the name of (Thowheed),you guy are splinting our muslime society..most of muslime villages are suffering the consequences. for example HEMMATHAGAMA..
and mostly this post is publicity----
உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள்.First You Have To Understand This Befor Point Finger To Other

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger