கண்ணால் கண்ட பிறையை மறைக்க பற்பல பாடு பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை மக்கள் முதுகுப் பின்னால் தூக்கியெறிந்து மார்க்கத்ததை நிலை நாட்டியதை பார்த்து பொங்கியெழுந்த ரிஸ்வி முஃப்தி(ன்), முஸ்லிம்கள் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும். எங்களுக்கு கட்டுப்பட வேண்டும். நான் தலைவர் என்றெல்லாம் மாறி மாறி சத்தம் போட்டதை மறந்திருக்கமாட்டீர்கள்.
தலைமைக்கு கட்டுப்படனும் என்று பேசியவர், அதற்கு சான்றாக பல பொய்களை விட்டு அடித்தவர், இன்னுமொன்றை கவனிக்கத தவறி விட்டார். அதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
தலைமைக்கு முஸ்லிம்கள் எப்படி கட்டுப் பட வேண்டும் என்று பேசியவர், தலைவைராக இருப்பவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
நமது உன்னத தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உண்மை சம்பவத்தை எடுத்துக் காட்டுகிறேன்.
ஒரு முறை இரவு வேளையில் மதீனாவின் எல்லைப் பகுதியில் பாரிய சத்தம் கேட்டதும் உடனே நபிகளார் தன்னந்தனியாக குதிரையில் விரைந்து சென்று பார்த்துவிட்டு வந்து மக்களே! அச்சம் கொள்ளத் தேவையில்லை! என்று மக்களை சமாதானப்படுத்தினார்கள்.
இதுதான் தலைவைரிடம் இருக்க வேண்டிய பண்பு!
இந்த பண்பு மேற்படி தலைவரிடம் உள்ளதா?
நேற்று பள்ளிவாசல் தாக்கப்பட்டதும் இவரது நடவடிக்கை என்ன?
அறிக்கை விடுவதை தவிர அவர் என்ன செய்வார்?
துஆ செய்வது மட்டும் மார்க்கம் இல்ல! களத்தில் குதித்து களப்பணியாற்றுவதும் தலைவருக்குரிய முக்கிய பண்பு.
அந்த பண்பை கொண்ட ஓர் அமைப்பில் நான் அங்கம் வகிப்பதில் மனதார மகிழச்சியடைகிறேன். அல்லாஹ்வைப் புகழ்கிறேன்.
பள்ளியை காப்பாற்ற என்னால் முடிந்த உதவியை துஆவுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு மேலும் செய்வேன் இன்ஷா அல்லாஹ்!
ஒவ்வொரு முஸ்லிமும் அநீதிக்ககெதரியாய் அறவழியில் நின்று போராட தயாராவீர்....!!!
நான் தயார்! நீங்கள்?
Post a Comment