PMGG கட்சியின் பின்னணி அறியாமல் ஆதரவு கொடுக்க வேண்டாம்


-அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி), (BA.Hons)-

இலங்கையில் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய கொடுமைகள் நடக்கும்போதும் வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின் அவர்களின் உரிமைகள் கிடைக்கபெறாத நேரத்திலும் முஸ்லிம்கள் விடயத்துக்காக எதிர்க்குரல் கொடுக்காத இந்த PMGG கட்சி தற்போது முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வடமாகான சபை தேர்தலில் தமிழரசு கட்சியுடன் கூட்டணி அரசியலில் இறங்கியுள்ளனராம்.

அதுவும் இலங்கையில் பேரினவாத  அரசைவிட கேவலமான அரசியல் செய்துவரும் தமிழரசு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து முஸ்லிம்களை காப்பாற்ற போகின்றனாராம்.

என்னமோ தெரியவில்லை இந்த சிந்தனை கொண்ட இவர்கள் யாருடன் கூட்டணி வைகின்றனரோ அவர்கள் நல்லவர்களாகவும் நடுநிலமைவாதிகலாகவும் ஆகிவிடுகின்றனர் அவர்கள் பார்வையில்.

இஸ்ரேலுடன் இவர்கள் கூட்டணி வைத்தாலும் இஸ்ரேல் நடுநிலைமை வாதியாகவும் நல்லவனாகவும் ஆகிவிடுவான் இவர்கள் பார்வையில். எப்போது இவர்கள் கூட்டணி முறிகிறதோ அப்போது எதிர்தரப்பு துரோகி என்றும் மோசடிக் காரர்கள் என்றும் ஆகிவிடும் இவர்கள் பார்வையில். இவர்கள் ஆதரவு இயக்கமான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சி இப்படியான பிரச்சாரத்தையே எகிப்தின் எதிர்கட்சிகளுக்கு கூட்டணி முறிந்த பின் சொல்லிவருகின்றனர்.

இலங்கையில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் துரோகம் செய்த துரோகம் செய்துவருகின்ற கட்சியான தமிழரசு கட்சியுடன் இவர்கள் கூட்டணி வைத்து முஸ்லிம்களை காப்பாற்ற போகின்றரா? மன்னாரில் முஸ்லிம்களுக்கு தமிழரசு கட்சியினால் இழைக்கப்படும் கொடுமைகள் துரோகத்தை இவர்கள் அறியாமல் இல்லை.

எகிப்தில் இவர்கள் ஆதரிக்கும் இஹ்வான்கள் லெபறல் கட்சிகளுடன் கூட்டணி வைத்த போது அவர்களை நடுநிலைமை வாதிகள் என்று கூறி நியாயபப்டுத்தியவர்கள் இப்போது இஹ்வானிய ஆட்சி வீழ்ந்ததும் அவர்களை காபிர்கள் என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் நிலை ஆகிவிட்டது.

PMGG கட்சி பற்றிய அடையாள குறிப்புகள்

சென்ற கிழக்கு மாகான சபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகளை தோற்கடிக்கும் வங்குரோத்து அரசியலை கனகச்சிதமாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் செய்து முடித்தது.

ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லி முஸ்லிம்களின் வாக்குகளை பிரித்தாளும் வேலையை செய்யும் இவர்களை மக்களிடம் இனம் காட்டுவது காலத்தின் தேவையாகும்.
ஜனநாயக நாட்டில் விகிதாசார தேர்தல் முறைமையில் காத்தான்குடி பிரதேசத்தில் எவ்வாறு அரசியல் காய் நகர்த்த வேண்டும் என்பதை அறியாமல் தேர்தலில் குதித்து இஸ்லாமிய ஓட்டுகளை பிரித்து பேரினவாதிகளுக்கு வெற்றிமாலை கொடுத்துள்ளனர்.

அரசியல் சாணக்கியம் உள்ளவர்கள் என்று தம்மை தாமே சொல்லிக்கொண்டு வடிகட்டிய முட்டாள் தனத்தை இந்த தேர்தலில் அரங்கேற்றியுள்ளனர்.

முஸ்லிம்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு தங்களுக்கு ஆதரவு வழங்கிய ஐயாயிரம் வாக்குகளை ஒரு அமுக்க குழுவாக செயல்பட்டு ஒரு முஸ்லிம் அரசியல் கட்சிக்கு வழங்கியிருந்தால் ஒரு பேரினவாதியின் மாகாண சபை ஆதிக்கத்தை இஸ்லாமிய மாகாணமான கிழக்கில் குறைத்திருக்கலாம்.

இவர்களும் இவர்கள் சார்பு இயந்திரங்களின் ஆரம்ப நிலை என்ன முடிவு நிலை என்ன? போன்ற நடை முறை மனப்பதிவுகளையும் வரலாற்றையும் ஒருங்கிணைத்து நோக்கும் ஒருவரே இவர்கள் பற்றிய உண்மை முகத்தை கண்டுகொள்ள முடியும்.

இவர்கள் ஒரு சாதாரண சாமான்யமானவர்களாக இருக்கும்போது நடு நிலை வாதியாகவும்  மாற்றுக்கருத்தை பக்குவத்துடன் ஏற்றோ மறுத்தோ இயங்கும் தரப்பாக தங்களை மக்கள் மன்றத்தில் அடையாலபடுத்துவார்கள்.

பின்னர் குறித்த பிரதேசத்தில் ஆதிக்க சக்தியாக மாறிய பின்னர் ஒற்றுமை என்பதற்கு முதல் எதிரி இவர்கள்தான். நடுநிலமைக்கு உலைவைக்கும் சக்தியே இவர்கள்தான். மாற்றுக்கருத்தை அவமதித்து மாற்று கருத்துடையோரை மக்களிடம் தவறான கண்ணோட்டத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்த துணிபவர்கள் இவர்கள்தான்.

தமது அடிப்படை கொள்கையான அரசியல் இலாபங்களை அடைவுகளை அடைந்துகொள்ள வெட்கம் இல்லாமல் முன்னுக்கு பின் முரண்பட்டு பேசுவார்கள். அதை ஒரு அரசியல் ஆய்வாளன் சுட்டி காட்டும்போது அப்பட்டமான தவறில் தாம் இருக்கின்றோம் என்று தெரிந்தும் மழுப்பி எதையாவது உளறி பதில் என்று ஒன்றை வைத்துவிட்ட மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.

ஆன்மீக  பெயர்களில் அரசியலை உள்வாங்கி ஆன்மீகத்துக்கே குந்தகம் விளைவிப்பார்கள். ஆரம்பத்தில் அவர்களின் நகர்வு நடுநிலைமை, ஒற்றுமை, மாற்று கருத்தை மதிக்கும் தன்மை கொண்ட ஒரு தரப்பாக மக்களிடம் தமது தனித்துவத்தை காட்ட எத்தனித்து ஆதிக்கம் வந்தவுடன் இம்மூன்று அழகிய பண்புக்கும் உலை வைத்து உதைத்துவிடுவர்கள்.
இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் ஆன்மீக தஹ்வா நகர்வுகளில் அனுசரிப்பு என்ற பெயரில் இவர்கள் காட்டும் அவல நிலைகளை நாம் கண்டுவருவது புதிதல்ல. அதே நேரம் இவர்கள் சமூகத்தில் உள்ள தலையாய பிரச்சினைகளுக்கு தீர்வுப்பொதியை பல சங்கடங்களை சந்தித்தே வைக்க வேண்டிய நிலை வரும் பட்சத்தில் ஒதிங்கி நின்று பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் தங்களை உள்வாங்கி விடாது இஸ்திரி போட்ட கோட்டும் ஷூட்டும் அனுகாமல் பிசகாமல் குலையாமல் ஒதிங்கி நின்றுவிட்டு சமூக தீர்வுக்கு தலையை முட்டி மோதி தியாகித்து சென்ற தரப்பை மிகவும் இலகுவாக ஒரு அறிக்கையில் விமர்சித்துவிட்டு முஸ்லிம்களின் பிரதிநிதி நாமே என்ற திமிருடன் வெட்கமின்றி நிமிர்ந்து செல்வார் இவர்கள்.

PMGG கட்சி கிழக்குமாகாண சபை தேர்தலில் தனித்தும் வடமாகாண சபை தேர்தலில் கூட்டணி வைத்தும் போட்டியிட காரணம்

காத்தான்குடியில் இவர்கள் ஆதிக்கம் பெற வேண்டும் என்பதால் ஹிஸ்புல்லாவையோ முஸ்லிம் காங்கரசசையோ  ஆதரிப்பதில் இவர்களுக்கு எந்த வித நன்மையுமில்லை என்பதை உணர்ந்த இவர்கள் ஹிஸ்புல்லாவை எதிர்ப்பதன் மூலமே எதிர்த்தரப்பை தமக்குள் உள்வாங்க முடியும் என்ற ரீதியில் எதிர்கின்றார்களே தவிர இவர்களின் அடிப்படை அறிக்கைகள் மாற்றுக் கருத்தை எதிர்க்கும் தரப்பாக காட்டாது.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் இவர்கள் நோக்கம் எதுவோ அதை ஓரளவு செய்தனர். தமது கட்சி வெற்றிபெறவில்லை என்றாலும் முஸ்லிம் பிரதிநித்துவம் உடைக்கப்படவேண்டும் என்ற அவர்கள் நோக்கம் ஓரளவு நிறைவேறியது.

அதே நிலைதான் தற்போது வடமாகாண சபை தேர்தலிலும் நடகின்றது. ஆனால் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது. தமது கட்சியின் பிரதிநிதியும் வெற்றிபெறவேண்டும் அதே நேரம் முஸ்லிம் ஓட்டுகள் முஸ்லிம் கட்சிக்கும் போக கூடாது என்ற வியூகம் அமைத்தே தமிழரசு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர். வடமாகாண சபை தேர்தலில் இவர்கள் தனித்து போட்டியிட்டால் தமது கட்சியின் வங்குரோத்து வெளிப்பட்டுவிடும் என்று தெரிந்து தமது ஆதரவை முஸ்லிம் தரப்பு அல்லாத ஒரு சாராருக்கு கொடுத்து பதவியில் வந்துவிட துடிக்கின்றனர். இவர்கள் கட்சி அல்லாத வேறு முஸ்லிம் கட்சி பிரதிநிதித்துவம் இல்லாமல் போக வேண்டும் என்பதற்கே இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இலங்கையில் கிழக்கு மாகாண சபை தேர்தளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்று இழக்கபட்டதற்கு இவர்கள் முக்கிய பங்காளிகள் என்ற அடிப்படையிலும் இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவ படுத்துவதட்காக பல கட்சிகள் அரசியல் அரங்கில் ஏலவே இருப்பதால் இஸ்லாமிய சமுதாயத்தில் அரசியல் ரீதியாக இழக்கப்பட உரிமைகளும் சலுகைகைகளும் அதிகம் என்ற வகையில் அதை சீர் செய்ய சிந்தனை அடிப்படையில் அதற்கான மாற்றீடு ஒன்றை முன்வைப்பது இயல்பே. ஆனால் அதை முன்வைத்த முறையிலேயே மக்கள் நல்லாட்சிக்கான இயக்கம் வரலாற்று தவறோன்ரை நிகழ்த்தியுள்ளது.

இலங்கை அரசியலில் இத்தேர்தலில்  மாற்றீடு என்பது இருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்துக்கு மத்தியில் ஒரு  இணக்கப்பாட்டை முன்வைத்து  அரசியல் தீர்வை நாடுவது. இது சாத்தியம் ஆகாத பட்சத்தில் இக்கட்சிகளுக்கு மத்தியில் ஓரளவு ஏற்கத்தக்க நியாயங்களை கொண்ட சமூக நலன் சார்ந்து கட்சிக்குள்ளேயே ஓரளவாவது ஜனநாயகம் பேணகூடிய ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து அதை சீர்படுத்த எத்தநிப்பதே வரலாற்று  ரீதியாக நாம் கண்ட பின்னடைவுக்கு தீர்வு பொதியாக அமைந்திருக்கும்.

இதற்கு மாறாக புதிய கட்சியின் உருவாக்கத்தின் தேவைப்பாட்டை விட மீண்டும் சமூக உடைவை தோற்றுவிக்காத  எளிய சமூகம் சார்ந்த தீர்வுப்பொதி ஒன்று எமக்கு மத்தியில் வெள்ளிடை மலையாக இருக்கும் இவ்வேளையில்  பிரிவினையை தூண்ட கூடிய புதிய கட்சி உருவாக்கம்தான் தீர்வு என்பது எந்தவகையிலும் அரசியல் சானாக்கியம் உள்ளவர்களால் ஏற்க முடியாது.

நிலை இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அறிஞர்கள் என்றும் சமுதாய தலைவர்கள் என்றும் தங்களை தாங்களே மக்கள் மன்றத்தில் அடையாளப்படுத்திகொண்ட இவர்கள் முஸ்லிம்களின் துரோகிகளான தமிழரச கட்சியை ஆதரிக்க முற்படுவதன் மூலம் சமுதாயத்துக்கு இவர்கள் சொல்ல வரும் செய்தி என்ன?

வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் ஒழுங்கில் நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளைகொண்டு அரசியல் அடைவை எவ்வாறு சமுதாயம் சார்ந்ததாக நெறிப்படுத்த வேண்டும் என்பது தெட்டத்தெளிவாக இருக்கும் வேளையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்த்தின் இந்த பிரித்தாளும் முடிவு தமிழரசு கூட்டணியை  ஆதரித்திருப்பதானது மக்கள் மன்றத்தில்  அரசியல் சமூக ரீதியாக இவர்கள் ஒதுக்கப்படுவதட்கு தமக்கு தாமாக கொடுக்கும் அங்கீகாரமாகவே இதை நோக்கவேண்டி உள்ளது.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger