“பெருநாள் தொழுகைகளை மைதானத்தில் தொழுவது சுன்னத்தாக இருந்தாலும் நாம் வாழுகின்ற தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முறை இயன்றவரை மஸ்ஜித்களில் தொழுது கொள்வது சிறந்தது என நான் கருதுகின்றேன், எனினும் முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசங்களில் தவிர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அதேபோல் வழமைபோல் காலி முகத்திடலில் இடம் பெறுகின்ற கூட்டுத் தொழுகையை இம்முறை தவிர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஒவ்வொரு பிரதேசத்திலும் அவ்வப் பிரதேச உலமாக்கள் புத்தி ஜீவிகள் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி கள நிலவரங்களுக்கு ஏற்ப இந்த விடயத்தில் மஷூரா செய்து ஏகோபித்த முடிவினை அமுல் படுத்தல் சிறந்தது.”
இது தன்னை பிரபல சமூக ஆர்வலராய் காட்டிக் கொள்ளும்
மஸீஹூத்தீன் இனாமுல்லாஹ் (நளீமி) அவர்களின் அரை வேக்காட்டுத் தனமான ஆலோசனை!
இவர் தான் யுஸூபுல் கர்ளாவியை தலைவராக கொண்டு இயங்கும்
உலகளாவிய உலமாக்கள் ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாம்! அத்தோடு, இலங்கை வாழ் முஸ்லிம்கள்
எதிர் நோக்கும் சவால்களுக்கு தீர்வு சொல்லப் போகிறோம் என்று பிதற்றிக் கொண்டு “தேசிய ஷூரா சபை” என்ற கையாலாகா அமைப்பை
தோற்றுவிப்பதற்காக பம்பரமாய் ஓடி ஓடி உழைத்தவர்!
அப்பப்பா!!! நளீமி அவர்களே! உங்கள் சமூக ஆர்வம் பளிச்சென்று
தெரிகிறது. முஸ்லிம்களின் உரிமைகளை நீங்களும் உங்கள் தேசிய ஷூரா சபையும்
காப்பீர்களோ இல்லையோ இருக்கும் உரிமையையும், எஞ்சியிருக்கும் ஓரளவு தற்துணிவையும் கூட “சாணக்கியம், சகவாழ்வு” என்ற போர்வையி்ல் தாரை
வார்ப்பீர்கள் என்பது மட்டும் அழுத்தமாய் தெரிகிறது.
நெருக்கடியான சுழலை மையமாக வைத்து நபி வழித் தொழுகையை இன்று விடச்சொல்லும்
நீங்கள், நாளை இதே வாதத்தை வைத்து பள்ளிகளில் தொழாது
வீடுகளில் தொழுது கொள்ளுங்கள் என்றும் அறிவிப்பீர் போலும்!
நாட்டிலே அமைதியின்மை நிலவுகிறது எனவே சுமுக நிலை உருவாகும் வரை ஹிஜாபையும்
தூக்கி எரியுமாறு ஏவுவீர் போலும்!
ஹலாலை விட்டுக்கொடுத்ததை போன்று, தம்புள்ளை பள்ளியை தாரை வார்த்தது போன்று, மஹியங்கனை மஸ்ஜிதை மஸ்ஜிதே இல்லையென்று அறிக்கைவிட்டது போன்று எதிர் காலத்தில்
இன்னும் பல விட்டுக்கொடுப்புகளும் உங்கள் நாவிலிருந்து உதிரலாம்!
எதிர்ப்புகளுக்கு முன்னால் தொடை நடுங்கியாக மாறி, இது வரை மார்க்கத்தில் சமரசம்
செய்து அல்லாஹ்வின் தீனை அடகுவைத்த உங்களைப் போன்ற நளீமிக்கள் தற்போது சமூகத்தையும்
கோழைகளாக மாற்ற எத்தனிப்பது ரொம்ப ரொம்ப பிரமாதம்!
உங்கள் சிந்தனையின் வார்ப்பாய் மிளிரும் ஷூரா சபை மற்றும்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்பன எதிர்காலத்தில் எப்படி செயற்படுவார்கள்
என்பதற்கு உங்களது இந்த ஒரு அறிக்கையே போதுமான சான்றாகும்.
மார்க்கத்தில் விட்டுக்கொடுப்பு செய்து அசத்தியத்துடன்
கைகோர்த்து தற்போது தவ்ஹீத்வாதிகளை எதிர்ப்பது போல், சமூக விவகாரங்களில் விட்டுக்
கொடுப்பு செய்து துரோகிகளுடன் கைகுலுக்கும் உங்கள் பணி தொடரட்டும்!
Post a Comment