இக்வான்கள் திரு(ந்)த்தி எழுதிய தீர்ப்புக்கள்


-அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)-

இக்வானிய தலைமைகளை கைது செய்யமாட்டோம் என்றும் எதிர்வரும் தேர்தலில் இக்வான்களுக்கு தேர்தல் அனுமதி கொடுப்போம் என்றும் உறுதி அளித்தால் ராபியா அல் அதவியா போராட்ட களத்தை விட்டும் ஒதுங்கி விடுவோம் என்று இக்வான்கள் அறிவித்துள்ளனர்.

ஏலவே அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்னால் ஜனாதிபதி வேட்பாளர் முஹம்மத் சலீமுள் அவ்வாஎன்பவர் கொண்டுவந்த தீர்வு பொதியும் அரசியல் ஆய்வாளர்களான ஹஸனைன் ஹைகள்மற்றும் தாரிக் அல் பிஷ்ரிபோன்றோர் கொண்டுவந்த தீர்வு பொதிகளும் பயனளிக்காது போன பட்சத்தில் கடைசியாக இக்வான்கள் மேல் மட்ட குழு எகிப்தின் உலமாக்கள் ஷூரா அமைப்பின் முக்கிய பிரமுகர்களிடம் தீர்வுக்கான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது.

இக்வான்களின் இந்த தீர்வு யோசனையை ராணுவத்திடம் கொண்டு செல்லும் மத்தியஸ்த குழுவில் இருக்கும் அங்கத்தவர்கள் விபரம்.
  • கலாநிதி அப்துல்லாஹ் ஷாகிர் (ஸலபிகளின் ஷூரா சபை தலைவர்)
  • ஜமால் முராகிபி (அன்சார் சுன்னா முகம்மதியா தலைவர்)
  • கலாநிதி முஹம்மத் அப்துஸ்ஸலாம்
  • கலாநிதி அஷ்ஷைக் ஹஸ்ஸான் (ஸலபிகளின் ஷூரா சபை உறுப்பினர்)
இந்த சூரா சபை குழுவினரை சந்தித்த இக்வான்களின் ஆதரவு அணியின் குழுவில் இருந்தவர்கள் விபரம்
  • கலாநிதி அப்துர் ரஹ்மான் அல் பிர் (இக்வான்களின் ஷூரா சபை உறுப்பினர்).
  • கலாநிதி ஸலாஹ் சுல்தான்(இஸ்லாமிய விவகார திணைக்களத்தின் முன்னால் பொதுச்செயலாளர்).
  • அய்மன் அப்துல் கனி (சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சியின் உயர்மட்ட உறுப்பினர் ).
  • சப்வத் அப்துல் கனி(அபிவிருத்திக்கும் எழுச்சிக்குமான கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்).
  • அதீய்யா அத்லான்.
  • ஈஹாப் சைஹா (ஹிஸ்புல் அஸாலா கட்சியின் தலைவர்).
முர்சியின் ஆதரவு சார்பான குழு ஷூரா சபை உறுப்பினர்களிடம் ராணுவத்திடம் முன்வைக்குமாறு வைத்த கோரிக்கைகள் விபரம்:
  • ஒன்று: ரெத்த ஓட்டத்தை நிறுத்துதல்
  • இரண்டு :தொடர் போராட்டத்தில் உள்ளவர்களுடன்  இராணுவ பலத்தை பிரயோகிக்க கூடாது 
  • மூன்று: நேர்மையான பேச்சுவார்த்தைக்கான சூழலை ஏற்படுத்துதல் 
  • நான்கு : மக்களிடம் வெறுப்பையும் பகைமையையும் பலிவாங்குதளையும் தூண்டும் விதமாக ஊடங்கள் செயல்படுவதை தடுத்தல்.
  • ஐந்து:சூரா சபையினால் முடியுமாக இருந்தால் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு பின் கைதுசெய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யவும் அவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட நீதித்துறை வழக்குகளையும்  வாபஸ் பெறவும் ராணுவத்தை கோருதல்.  
இராணுவ உயர்மட்டத்தை சந்தித்த பின் கலாநிதி அஷ்ஷைக் ஹஸ்ஸான் அவர்கள் கூறிய தகவல்கள்.

உணர்ச்சி வசப்படுவது மாத்திரம் தீர்வை கொண்டுவரப்போவதில்லை. தற்போதைய நிலை மோசமான நிலையை எட்டியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு ராணுவ உயர்பீடத்துக்கு அல்லாஹ் பொருந்திக்கொள்ளும் விதமாக கோரிக்கைகளை முன்வைத்தோம்.

ஆர்ப்பாட்டகாரர்களின் மீது இராணுவ பலத்தை பிரயோக்கிக்க கூடாது. ஊடகங்கள் பரப்பும் பகைமை செய்திகளை கட்டுபாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.எகிப்தை இன்னொரு கோத்திர சண்டைக்குள் கொண்டு செல்லாமல் தடுக்க வேண்டும் என்றும் ராணுவத்திடம் கோரிக்கை வைத்தோம். அவர்கள் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியுள்ளனர். இதன் பெருபேறு அல்லாஹ்விடமே உள்ளது. எமது முயற்சியை நாம் செய்துள்ளோம்.

ராபியா அதவியாவிலும் நஹ்லா மைதானத்திலும்  ஆக்ரோஷ பேச்சுக்களை தடுக்குமாறும் வன்முறை அற்ற ஆர்ப்பாட்டத்தை கடைபிடுக்குமாரும் கோருவதற்கு ராணுவம் எம்மை வேண்டிக்கொண்டது
இவ்வாறு கூறிய கலாநிதி அஷ்ஷைக் ஹஸ்ஸான் அவர்கள் கீழ் கண்ட அல் குர்ஆன் வசனத்தை ஓதியவராக இரண்டு நிபந்தனைகள் ஊடாகவே பேச்சுவார்த்தையில் சுமூகமான சமாதனமான முடிவுக்கு வரமுடியும் என்று கூறினார்.

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்”(ஹுஜ்றாத்:9)

எண்ணம் தூய்மையாக இருத்தல்நேர்மையாக நடந்துகொள்ளல்.

நேர்மையின்மை என்பது இரு தரப்பில் எந்த தரப்பும் தாம் விரும்பியது அனைத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தல் அல்லது எதிர்தரப்பு தான் நினைத்தவை அனைத்தையும் விட்டுகொடுக்க வேண்டும் என்று நினைத்தல் ஆகும்.இந்த மன நிலை இருந்தாலும் தீர்வை எட்ட முடியாது எனவே இரு தரப்பும் மேலே கூறப்பட்ட இரண்டு நிபந்தனை ஊடாக பேச்சுவாதையில் கலந்துகொள்வதே தீர்வுக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

இக்வான்களின் காலம் கடந்த ஞானம்

இக்வானிய தலைமையை நம்பி  ஒரு மாதத்துக்கும் மேலாக கூடி இருக்கும் மக்களை ஏமாற்றி உள்ளனர் என்று நான் கூறிவந்தது உண்மையா பொய்யா?

தலைமைகளை கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றவே மக்களை கேடயமாக வைத்து இக்வானிய தலைமைகள் போராடி வந்தது என்ற உண்மை இதன்மூலம் புரிகிறதா?

மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக்காக உயிரையே கொடுக்க தயார் என்று சொன்ன முர்சியும் இக்வானிய தலைவர்களும்  எதையும் இழக்கத தயார் இல்லை என்பதை இந்த தீர்வு யோசனைமூலம் உறுதிப்படுத்திவிட்டனர். அவர்கள் இழந்ததாக சொல்வதென்றால் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதே. அதுவும் தலைவர்கள் உறுதியாக இருப்பார்கள் என்று நம்பிவந்த பொதுமக்கள்.

இந்த தீர்வுகளை ஆரம்ப காலத்தில் எடுத்திருந்தால் பல உயிர்களை இழக்காமல் இருந்திருக்கலாம்.

இக்வான்கள் தட்டிக்களித்த சாத்வீகமான தீர்வு யோசனைகள்

முர்சியின் ஆட்சி கவிழ்ந்த பின் வைக்கப்பட்ட சாத்வீக தீர்வு யோசனைகளை தட்டிகளித்துவரும் லேபரல்கள் ஒருபக்கம் இருக்க முர்சி அவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே பிரச்சினையின் உண்மை தன்மையை அறிந்து சில தீர்வு யோசனைகளை அந்நூர் கட்சியும் சில அரசியல் ஆய்வாளர்களும் முன்வைத்தபோதும் இக்வான்கள் அந்த யோசனைகளை தட்டிகளித்தனர். எதிர்கட்சிகளின் விபரீதத்தை சாதாரணமாக எண்ணினர்.

சென்ற மாதம் 30 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட முர்சிக்கு எதிரான போராட்டத்தின் விபரீதத்தை பற்றி சென்ற மாதம் 29 ஆம் திகதி அந்நூர் கட்சி முர்சி அவர்களுக்கு சொன்னபோது இக்வான்களின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சியின் தலைவர் கதாதினி அவர்கள் கூறியதாவது:

போராட்டகாரர்கள் 150000 பேரே வருவர்.அவர்கள் ஆர்ப்பாட்டம் வழமைபோன்று ஓரிரு நாள் இருக்கும் அதன்பின் திரும்பி வீடு சென்றுவிடுவர்

என்று பிழையாக கணக்கிட்டு முர்சியின் ஆட்சியை தக்கவைக்க கொண்டு வந்த யோசனைகளை  தட்டிகளித்தனர்.விளைவு முர்சியின் ஆட்சி பரிபோனதோடு பல உயிர்கள் காவுகொள்ளபட்டது.

முர்சியின் ஆட்சியின் போது வைக்கப்பட்ட தீர்வு யோசனைகளைவிட அதிகாமான பாதிப்புகள் உள்ள ஒரு தீர்வையே இக்வான்கள் தற்போது கேட்டு வாங்குகின்றனர்.

பிடிவதாத்தின் காரணமாக இக்வான்கள் பீசாவை எதிர்கட்சிக்கு பறிகொடுத்துவிட்டு இராணுவத்திடம் ரொட்டித்துண்டில் பங்கு கேட்கின்றனர். முர்சியின் ஆட்சியின் போது பிரச்சினைகளை தீர்த்து ஆட்சியிலும் இக்வான்கள் இருக்க முடியுமான தீர்வையே அந்நூர் கட்சி வைத்தது என்பதை தற்போது இக்வான்கள் மானசீகமாக உணர ஆரம்பித்துள்ளனர்.

தேவையான நேரத்தில் வராமல் தாமதமாக வந்த தீர்ப்பு அநியாய தீர்ப்பு என்பது உண்மையே.இக்வான்கள் பல பொதுமக்கள்  கொலை செய்யப்பட காரணமாக அமைந்த  பின்பு திருத்தி எழுதியுள்ள இந்த தீர்ப்பை மக்கள் எப்படி எடுத்துகொள்கின்றனரோ தெரியவில்லை.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger