இலங்கை முஸ்லிம்களை கருவறுக்க காய் நகர்த்தும் இந்தியா!


இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் இயங்குவதாக அண்மைக்காலமாய் பொது பல சேனா உள்ளிட்ட இனவாத அமைப்புகள் அறிக்கை விட்டு வந்தன. அதற்கு ஏற்றாற் போல் அமெரிக்காவும் ஒத்தூதி வந்தது. தற்போது இப்பணியில் இந்தியாவும் இரு கரம் கோர்த்துள்ளது.


யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு லக்ஷர் இ தய்பா அமைப்பு இயங்குவாக அண்மையில் இந்திய புலணாய்வுத் துறை அறிவித்துள்ளது. இவ்வவதூறுச் செய்தியை சில ஊடகங்கள் முந்திக் கொண்டு பரப்புரை செய்து வருகின்றன.

இதோ அந்த இணைப்புகள்...

யாழ்ப்பாணத்தில் முகாம்களை அமைக்கிறது லஷ்கர் இ தய்பா – புலனாய்வுத்துறை எச்சரிக்கை



இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக, லஷ்கர் இ தய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள், யாழ்ப்பாணத்தில் முகாம்களை அமைத்து வருவதாக, இந்தியப் புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி அதிகார வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இராமேஸ்வரம் வழியாக, தமிழ்நாட்டுக்குள் ஊடுருவும் நோக்கிலேயே லஷ்கர் இ தய்பா தீவிரவாதிகள், யாழ்ப்பாணத்தில் முகாம்களை அமைத்து வருவதாக, இந்திய மத்திய புலனாய்வுத்துறை, தமிழ்நாடு அரசாங்கம் மற்றும், புலனாய்வுப் பிரிவுகளுக்கு தகவல் அனுப்பியுள்ளது.
லஷ்கர் இ தய்பா தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் துறைசார்ந்த அமைப்புகளிடம் இந்தியப் புலனாய்வுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை அடுத்தே, இந்தியக் கடல் பகுதியில் சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாகத் தகவல் தரும்படி, இராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடம், கடலோரக் காவல்படையினர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
லஷ்கர் இ தய்பா தீவிரவாதிகள், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குள், நுழைவதற்கான தளமாக சிறிலங்காவைப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களமும், இராஜாங்கத் திணைக்களமும் கடந்த சில ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது,

http://www.jvpnews.com/srilanka/41537.html


யாழ்ப்பாணத்தில் லக்க்ஷர் ஈ தொய்பா முஸ்லிம் 

தீவிரவாத அமைப்பு

லக்க்ஷர் ஈ தொய்பா என்ற முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளதாக இந்திய உளவுப் பிரிவு தெரிவித்துள்ளதாக திவய்ன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முகாம் அமைத்து அங்கிருந்து இந்தியா மீது தாக்குதல் நடாத்த உத்தேசித்துள்ளதாகவும் அது குறிப்பிடப்படுகிறது.

இதன் இரு முகாம்கள்தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்திலும் தூத்துக்குடியிலும் செயற்படுவதாகவும் இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக திவய்ன கூறுகிறது. இந்தத் தீவிரவாத இயக்கம் 2008 ஆம் ஆண்டில் மும்பையில் பாரிய தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் கூறியுள்ளது.
http://tamil.theindependent.lk/home/root/news2/583-2013-08-05-03-09-28


මුස්‌ලිම් ත්‍රස්‌ත සංවිධානයක්‌ යාපනයේ කඳවුරු බැඳගෙන 
ඉන්දීය බුද්ධි අංශ හෙළි කරයි

චතුර පමුණුව 

ලක්‌ෂාර් ඊ ටොයිබා නමැති මුස්‌ලිම් ත්‍රස්‌ත සංවිධානය යාපනයේ කඳවුරු පිහිටුවාගෙන ඇති බව ඉන්දීය බුද්ධි අංශ විසින් අනාවරණය කර ඇත.

මෙම සංවිධානය යාපනයේ කඳවුරු පිහිටුවා ඒ හරහා ඉන්දියාවට ත්‍රස්‌ත ප්‍රහාර එල්ල කිරීමට සූදානම් වන බවට ඉන්දීය බුද්ධි අංශ අනතුරු අඟවා ඇත.

මොවුන්ගේ කඳවුරු තූත්තුකුඩියේ හා රාමේෂ්වරන් හි පිහිටු වීමටද සූදානම් වන බව ඉන්දීය මාධ්‍ය බුද්ධි අංශ වාර්තා උපුටා දක්‌වමින් ප්‍රකාශ කර ඇත.

2008 නොවැම්බර් මාසයේදී ඉන්දියාවේ මුම්බායි නුවරට දැවැන්ත ප්‍රහාරයක්‌ එල්ල කළේද මෙම සංවිධානය විසිනි.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger