ரமழான் காலத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் வெளியில் செல்லக் கூடாது என்று இடம் பெறக் கூடிய ஹதீஸ் தொடர்பான விளக்கத்தை இந்த ஆக்கத்தின் மூலம் தெளிவுபடுத்த நினைக்கின்றோம்.
سنن أبي داود (2/ 333)
2473 – حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: ” السُّنَّةُ عَلَى [ص:334] الْمُعْتَكِفِ: أَنْ لَا يَعُودَ مَرِيضًا، وَلَا يَشْهَدَ جَنَازَةً، وَلَا يَمَسَّ امْرَأَةً، وَلَا يُبَاشِرَهَا، وَلَا يَخْرُجَ لِحَاجَةٍ، إِلَّا لِمَا لَا بُدَّ مِنْهُ، وَلَا اعْتِكَافَ إِلَّا بِصَوْمٍ، وَلَا اعْتِكَافَ إِلَّا فِي مَسْجِدٍ جَامِعٍ “، قَالَ أَبُو دَاوُدَ: غَيْرُ عَبْدِ الرَّحْمَنِ لَا يَقُولُ فِيهِ: قَالَتْ: السُّنَّةُ “، قَالَ أَبُو دَاوُدَ: «جَعَلَهُ قَوْلَ عَائِشَةَ
இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும் ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும் மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல் இருப்பதும், அணைக்காமல் இருப்பதும் அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் சுன்னதாகும். மேலும் நோன்பு இல்லாமல் இஃதிகாஃப் இல்லை. ஜுமுஆ நடக்கும் பள்ளியில் தவிர இஃதிகாப் கூடாது”
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அபூதாவூத் (2115)
இந்த ஹதீஸில் இடம் பெறும் சுன்னத்தாகும்” என்ற வாசகம் யாருக்குரியது என்பதிலும், இந்த வாசகத்தை அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்களா? என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
وأخرجه النسائي في “الكبرى” (3336) ، والدارقطني في “السنن” 2/201 من طريق حجاج، والدارقطني أيضاً من طريق القاسم بن معن، كلاهما عن ابن جريج، به. زاد النسائي والدارقطني: ثم اعتكف أزواجه من بعده. وسلفت هذه الزيادة برقم (24613) . وزاد الدارقطني: وإن السنة للمعتكف أن لا يخرج إلا لحاجة الإنسان، ولا يتبع جنازة، ولا يعود مريضاً، ولا يمس امرأة ولا
يباشرها، ولا اعتكاف إلا في مسجد جماعة، وسنة من اعتكف أن يصوم، ثم ذكر الدارقطني أن هذه الزيادة ليست من قول النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وأنها من كلام الزهري، ومن أدرجها في الحديث فقد وهم.
இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும் ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும் மனைவியைத் தீண்டாமல் இருப்பதும் அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் சுன்னதாகும். ஜுமுஆ நடக்கும் பள்ளியில் தவிர இஃதிகாப் கூடாது” என்ற வாசகம் இந்தச் செய்தியில் இடம் பெறும் ஸுஹ்ரி என்ற அறிவிப்பாளருக்கு உரியது. இதை ஹதீஸின் வாசகமாக குறிப்பிட்டவர் யூகமாகக் குறிப்பிட்டு உள்ளார் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: ஸுனன் தாரகுத்னீ, பாகம்: 2, பக்கம்: 201)
இதே செய்தியை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த வாசகத்தை நம்பகத் தன்மையுள்ள பெரும்பாலானவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அடுத்து வருபவர்களின் சொல்லாகவே குறிப்பிட்டுள்ளார்கள். யார் இதை ஹதீஸின் வாசகமாகக் குறிப்பிட்டு உள்ளார்களோ அவர்கள் யூகமாகவே கூறியுள்ளார்கள். (நூல் : பைஹகீ 8377)
இமாம் ஸுஹ்ரீ அவர்கள் ஹதீஸ்களை அறிவிக்கும் போது தனது கருத்தையும் ஹதீஸ் வாசகங்களுடன் (இது என் கருத்து என்று) தெளிவு படுத்தாமல் இணைக்கும் வழக்கம் உள்ளவர். எனவே இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொள்ள முடியாது. (அல்லாஹ் மிக அறிந்தவன்)
இதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது நோயாளியை சந்திப்பார்கள், ஜனாஸாவில் கலந்து கொள்வார்கள் என்றும் சில ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. அவையும் பலவீனமானவையே!
அவசியத் தேவைகள் தவிர வெளியில் செல்லாமல் இருப்பது சிறந்தது.
அவசியமான காரியங்களாக இருந்தால் மட்டுமே வெளியில் சென்று விட்டு தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் தவிர்ந்து கொள்வது சிறந்ததாகும். இதனை கீழ்காணும் ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.
صحيح البخاري (3/ 48)
2029 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا – زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَتْ: وَإِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَيُدْخِلُ عَلَيَّ رَأْسَهُ وَهُوَ فِي المَسْجِدِ، فَأُرَجِّلُهُ، وَكَانَ لاَ يَدْخُلُ البَيْتَ إِلَّا لِحَاجَةٍ إِذَا كَانَ مُعْتَكِفًا»
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன். இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.(புகாரி – 2029)
தனது தலையை வாரிக் கொள்வதற்குக் கூட வீட்டுக்குள் வராமல் தலையை நீட்டி வாரிவிடும் படி நபியவர்கள் தலையை நீட்டுவார்கள். அவசியமான தேவையான இருந்தால் மாத்திரம் வீட்டிற்குள் வருவார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸில் இருந்து நாம் அறிய முடியும்.
புகாரியின் (2029) ஹதீஸின் அடிப்படையில் இஃதிகாஃப் இருப்பவர் அவசியமான தேவைகளைத் தவிர மற்ற எவைகளுக்கும் வெளியில் செல்லாமல் இருப்பது சிறந்தது.
thanks: http://rasminmisc.com
Post a Comment