ஒற்றுமை என்பது உங்களுக்கெதிராக வரும்போதுதானா? அல்லாஹ்வுக்காக
இல்லையா?
தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பித்திலிருந்து
தவ்ஹீதுக்கு எதிரிகளான பரேலவிகள் முதற்கொண்டு விலாங்கு மீன் வேடம் போடும் தப்லீக்
ஜமாஅத்தார் வரை வைக்கும் ஒரே கோஷம் ஒற்றுமைக் கோஷம்!!
நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.! ஒற்றுமை
முக்கியம் என்று கூவித்திரிந்தனர்.
ஒற்றுமை என்பது அனைவரும் ஒத்த கருத்துக்கு
வருவதுதான். பல கருத்தில் இருந்து கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பது அல்ல! என்று
நாம் பல தடவை விளக்கியும் வீம்பு செய்தனர்.
நேற்று கொழும்பில் தப்லிக் பள்ளிவாசல்
தாக்கப்பட்டது. தாக்கப்பட்டது அல்லாஹ்வின் இல்லம் என்ற ஒரே நோக்கத்துடன் களத்தில்
குதித்த SLTJயை, இது தப்லீக்
பள்ளி! இது எங்கள் பள்ளி! எங்கள் பள்ளியை நாங்க காப்பாத்துவோம். நீங்க வரவேணாம்
என்று சொல்லி அப்படியே கழற்றி விட்டது. பள்ளியையும் தாரைவார்த்து கொடுத்துவிட்டது.
ஏம்பா...! இப்ப எங்க போச்சு உங்க ஒற்றுமை கோஷம்? இப்ப என்ன ஆனது
உங்கள் ஒற்றுமை வேஷம்...?
இப்போது புரிந்ததா? சமுதயாத்தை
பிரித்து ஒற்றுமைக்கு எதிராக நிற்பது யார் என்று இப்போது புரிந்ததா?
இவ்வளவு காலமும் ஒற்றுமை என்று பிதற்றிது
மார்க்கத்தக்காக அல்ல! தங்கள் மானத்துக்காக!
தவ்ஹீதுவாதிகள் பள்ளியை காப்பாற்ற முன்வந்தால்
அதை தடுத்து நாங்கள் காக்க வந்த ஒரே காரணத்துக்காக அல்லாஹ்வின் பள்ளியையே
பலியாக்கிய உங்கள் கொள்கை உறுதியை(?) மெச்சுகிறோம்(?)
நீங்களும் செய்யமாட்டீர்கள் செய்ய வருபவர்களையும்
விடமாட்டீர்கள்.
இனிமேல் இந்த தப்லீக் கூட்டம் ஒற்றுமை என்ற
கோஷத்தை வெட்கம், மானம், சூடு, ரோஷம், சொரணை இருந்தால்
சொல்லட்டும் பார்க்கலாம்....!
ஒற்றுமை கோஷத்தை தவ்ஹீதுக்கு எதிராக
தூக்கிப்பிடித்தோரின் வேஷத்தை கலைக்க அல்லாஹ்வாக பார்த்து நடாத்திய சோதனையோக
இருக்குமோ என்றுதான் எண்ணத் தோண்றுகிறது!
ஆக்கம் சகோதரர் : Ihsas Mohamed
Post a Comment