"நயவஞ்சகர்களுக்குத்
துன்புறுத்தும் வேதனை உண்டு''
என்று (முஹம்மதே!) எச்சரிப்பீராக!
அவர்கள் நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். அவர்களிடம் கண்ணி யத்தைத் தேடுகிறார்களா? கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர் களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர் களைப் போன்றவர்களே என்று இவ் வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.(4:138-140)
இந்த வசனம் மிகத்தெளிவாக ஒரு கருத்தை
சொல்கிறது.அல்லாஹ்வுடைய வசனங்கள் எந்த இடத்தில் கேலி செய்யப்படுமோ அந்த இடங்களில்
அமரக் கூடாது என்று எச்சரிக்கிறது.
இவ்வசனத்திற்கு நேர் மாற்றமாக பச்சை
இணைவைப்பு நடக்கும் பிரித் சபையில் அல்லாஹ்வை மட்டும் ரப்பாக ஏற்ற ஒரு முஸ்லிம்
எப்படி அமர முடியும்? அது மட்டுமல்ல, ஒரு தீமையை
கண்டால் கையால் தடுங்கள்! இயலாவிட்டால் நாவால் தடுங்கள்! அதுவும் முடியாவிட்டால்
மனதால் வெருத்து அவ்விடத்திலிருந்து ஒதுங்கிவிடுமாறு நபிகளார் பணிக்கிறார்கள்.
இத்தனை தடைகளையும் தாண்டி தாடி ஜூப்பா தலைப்பாகையுடன் இவர் இந்த இடத்தில்
இருப்பதன் நோக்கம் என்ன?
குர்ஆன் சொல்வது போல் இவர்கள்
இப்பிக்குமாரிடம் கண்ணியத்தையும்,
நாங்கள் உங்களுடன் தான் இருக்கின்றோம் என்ற
பதிவையும் ஏற்படுத்தி தங்கள் சுயலாபத்தையும் , கையாலாகாத்தனத்தையுமே
வெளிக்காட்டுகின்றனர். பிரச்சினைக்கு பயந்து பள்ளியை விட்டுக்
கொடுத்தார்கள்.இப்போது பிக்குமாருடன் சேர்ந்து பிரித் ஓதி மார்க்கத்தையும்
விட்டுக்கொடுத்திருக்கிறார்கள்.நாளை நபிகளார் சொன்னது போன்று சிலைகளையும்
வணங்குவார்கள்.இந்நிலை ஏற்படாமல் மறுமை வராது என்பது நபிவாக்கல்லவா?
அல்லாஹ்வின் ஆலயத்தை விட்டுக் கொடுத்து, மார்க்கத்தையும் விட்டுக்கொடுத்து மக்களை வழிகேட்டின் பால் வழி நடாத்தும் உலமாக்களே மறுமையை அஞ்சிக்கொள்ளுங்கள்
+ comments + 1 comments
தலைக் கட்டை பார்த்தாலே தெரியவில்லையா கபுறு வணங்கி என்று.இதெல்லாம் உலக (வஹ்ன்) ஆதாயத்திட்காக இந்த கூட்டம் எதுவும் செய்யும்.
Post a Comment