நொக்கியா வரை படத்தில் மாத்தளை நகரம் 'முஸ்லிம் நகரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பில் இருந்து 142 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இந்த மாத்தளை நகரம்,பிரித்தானியர்களுக்கு எதிரான 1848 ஆம் ஆண்டு புரட்சியின்போது முக்கியமான நகராக கருதப்பட்டது
இந்த நகரத்திலேயே வீரன்புரன் அப்பு, மொனராவில கெப்பிட்டிப்பொல, கொங்கலாகொட பண்டா போன்ற தேசிய வீரர்கள் வாழ்ந்ததாக சிங்கள வரலாறு கூறுகிறது
இந்தநிலையிலேயே மாத்தளையை நொக்கியா வரைபடம், முஸ்லிம் நகரம் என்று குறிப்பிட்டுள்ளது
இதனையடுத்து குறித்து பிரச்சினை அடுத்த வாரத்தில் சிங்கள அடிப்படைவாதிகளால் பெரிதாக முன்னெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
Post a Comment