எண்ணம் வைத்தோம். கன்னம் வைத்தாய்.....
ஆக்கம் - ரூஹூல் ரஸ்மி
பாதித்தவன் சாதித்தவன் என்று
வாதித்தான்
மௌனம் சாதித்தவன் வாதித்ததாக
போதித்தான்
நட்டம் பட்டாலும் பட்டவன்
விட்டான்
நோட்டம் இட்டாலும் ஓட்டப்
பட்டான்
விட்டுக் கொடுக்க ஓங்கிக்
குட்டினான்
ஓட்டுக் கொடுக்க வாங்கிக்
கட்டினான்
எதிரியாய் இருந்தவன் எதிரில்
நின்றான்
பாதிரியாய் இருந்தவன் பதறி
நின்றான்
பள்ளியை அழித்தும் பல்லினை
இளித்தான்
தள்ளியே ஒலித்தும் சொல்லினை
பழித்தான்
தாக்க வந்தவனை ஊக்கம்
செய்தான்
தாங்க வந்தவனை ஏங்கச்
செய்தான்
வாள் எடுத்தவனின் வாலைப்
பிடித்தான்
தோள் கொடுத்தவனின் தோலை
உரித்தான்
ஏக்கம் தேக்கமாகி தொண்டையைத் தாக்குகிறது. உன்னைக் காக்க முன்னால் நின்றோம். முன்னால் பார்க்க முதுகைத் துளைத்தாய். எண்ணம் வைத்ததாலா பின்னால் கன்னம் வைத்தாய்? இரத்தம் வரவில்லை. கண்ணீர்தான் வந்தது. எமக்கே உரித்தான வசனமும் வந்தது. "ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம்" (5:8)
+ comments + 1 comments
Ellorukkum
RIZWE MUFTHI awarhalai wettik kondru,
oru TOMATO SOAS bottle um koduthhaal,
sandosamaha thottutth thinbarhal endru ninakkiren
Post a Comment