பொது பலசேனாவின் குருணாகல் மாவட்ட
மாநாடு, குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,
சமாதானத்தை
விரும்பும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள்
எமக்கு ஆதரவை நல்குகின்றனர். அரசியல்வாதிகளும் கடும் போக்காளர்களும்
சில ஊடகங்களுடன் இணைந்து எம்மைத் தூற்றி வருகின்றனர். சில அரசியல்வாதிகள்
அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து எமக்கு எதிராக சதி செய்கின்றனர். கிறிஸ்தவ
முஸ்லிம் அமைப்புக்கள் எம்மை ஆத்திரமூட்டி வருகின்றன. சிலர் எம்மை அரசாங்கத்தின்
அடிவருடிகள் என கூறி வருகின்றனர். எப்படி இருந்த போதிலும் எமது செயற்பாடுகளை
தடுக்க முடியாது.
இலங்கையில் இனி
விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புதிதாக அமைக்கப்படவேண்டிய தேவையில்லை. இதற்கான சட்டமொன்றை
ஜனாதிபதி கொண்டு வர வேண்டும்.
பெளத்தர்களின்
தேவைகளை நிறைவேற்ற இன்று ஒருவருமில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கு அனைத்தையும்
வழங்க பலரும் உள்ளனர். முஸ்லிம்களால் எமக்கு ஏற்பட்டுள்ள இடர்கள் தொடர்பாக
அனைத்து பெளத்த அமைப்புக்களும் கலந்து உரையாடி அதற்கு எதிராக தீர்மானம்
ஒன்றைக் கொண்டு வர வேண்டும்.
பள்ளிவாசல்களில்
முஸ்லிம்கள் எமக்கெதிராகப் பேசும் விடயங்கள் வெளிவருவதில்லை. பிக்குகள்
அரசியல்வாதிகளின் பின்னால் செல்லத் தேவையில்லை. நாம் புத்தரின் சீடர்களேயன்றி
ஏனையவர்களின் சீடர்கள் அல்ல. 1948 இன் பின் பெளத்த அரசியல்வாதிகள் எம்மை
ஏமாற்றி விட்டனர். இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்று கூறுபவர்களுக்கே
சிங்களவர்கள் வாக்களிக்க வேண்டும். இலங்கையில் போதைவஸ்து பெருக்கத்திற்கு
அரசியல்வாதிகள் காரணம். போதைவஸ்து வியாபாரிகளை அவர்களே பாதுகாக்கின்றனர்.
இலங்கையில்
இன்று தவ்ஹீத் ஜமாத்தினரால் பிரச்சினைகள் உருவாகிவருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ள இவர்கள் இந்தியாவில்
தமிழ் நாட்டிலும் காலூன்றி உள்ளனர். உலகில் இவர்களால் 52 நாடுகளில் பிரச்சினை கொழும்பு பெரிய பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை பெருநாளைக்
கொண்டாடும்படி கூறிய போது கிழக்கில் வியாழக்கிழமை கொண்டாடிய குழுவினர்
இவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக இவர்களின் செயற்பாடுகளால் சிங்களவர்களும்
தமிழர்களுமே பெரிதும் பாதிக்கப்படுவர்.
முஸ்லிம்கள்
பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு சிறப்பாக வாழட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை.
ஆனால் அரபுச்சட்டங்களை இங்கு கொண்டு வர முடியாது. பெளத்த மதம் தொடர்பான இழிவான
துண்டுப்பிரசுரங்களை தெளபீக் ஜமாத்தினர் வெளியிட்டுள்ளனர். பாதுகாப்புப்
பிரிவினர் இவர்களைக் கட்டுப்படுத்தா விட்டால் நாம் அவர்களைக்
கட்டுப்படுத்துவோம்.
பெளத்த
பயங்கரவாதம் என வெளியுலகிற்கு இக்குழு தவறான தகவல்களை வழங்கி உதவி பெற்று இலங்கையை
துண்டாட இக்குழு முயற்சி செய்கின்றது. ஜமாத்தே இஸ்லாம் குழு கிழக்கில் இயங்குவது
நாட்டுக்கு ஆபத்து. கடும் போக்குள்ள இக்குழுக்களிடம் இருந்து இலங்கை முஸ்லிம்கள்
பாதுகாக்கப்பட வேண்டும்.
இன்று பிக்குவாக
துறவறம் மேற்கொள்ள வருபவர்கள் குறைவு. ஆட்களைத் தேடிக் கண்டு பிடிக்கவும்
கஷ்டமாக உள்ளது. பிக்குகள் முன் வந்து பெளத்தத்தைக் காப்பாற்ற வேண்டும்
என்றார்.
Post a Comment