18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன், அவரது சம்மதத்துடன் ஒரு ஆண் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் இல்லை என்று டெல்லி நீதிமன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
டெல்லியில் 15 வயது பெண் ஒரு பெண்ணை கடத்தி பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக 22 வயது வாலிபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து, வாலிபரை கைது செய்தனர்.
இந்த வழக்கை டெல்லி கூடுதல் செசன்சு நீதிபதி தர்மேஷ் சர்மா விசாரித்து வந்தார்.விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபரை விடுதலை செய்து அவர் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு விவரம் வருமாறு:
இந்த வழக்கில் டெல்லி பொலிசாரும், டெல்லி மகளிர் ஆணையமும், சமீபத்தில் இயற்றப்பட்ட போக்சோ சட்டப்படி (குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தின்படி) 13 வயது முதல் 18 வயது வரையிலான பருவ வயதினர் எந்த விதமான செக்ஸ் உறவும் வைத்துக்கொள்ள ஒட்டுமொத்த தடை வேண்டும் என்றார்கள்.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டால், 18 வயதுக்கு உட்பட்ட எந்த ஒரு தனி நபரின் உடலும் அரசின் சொத்தாகி விடும், 18 வயதுக்குட்பட்ட தனி நபர் மற்றொருவருடன் உடல் இன்பம் அனுபவிக்க முடியாமல் போய் விடும் என அஞ்சுகிறேன்.
அதே நேரத்தில் மிக இளம் வயதில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது பாதுகாப்பற்ற செக்ஸ் உறவில் ஈடுபட்டாலோ அதனால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூகக்கடமை நம் அனைவருக்கும், அரசாங்கத்துக்கும், பொலிசுக்கும் இருக்கிறது.
போக்சோ சட்டத்தைப் பொறுத்தமட்டில், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளாகவே கருதுகிறது. இந்தச்சட்டத்தின் பிரிவுப்படி, 18 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் சம்மத பாலுறவு வைத்துக்கொள்வது குற்றம் ஆகாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணும், பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆணும் திருமணம் செய்து கொண்டு விட்டனர்.
Post a Comment