எகிப்தில் அதிரடி ராணுவ புரட்சி; அதிபர் முர்சி நீக்கம் (Breaking news)


எகிப்து அதிபர் முஹம்மது மோர்சி பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர்.
தலைநகர் கெய்ரோவில் உள்ள தாஹிர் சதுக்கத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
எகிப்து சந்தித்து வரும் இந்த சிக்கலான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ராணுவம் களமிறங்கியது.
‘மக்களின் கோரிக்கைக்கு அதிபர் முஹம்மது மோர்சி 48 மணி நேரத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால், இதர அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய பாதையை ராணுவம் தேர்ந்தெடுக்க வேண்டியதாகி விடும் என ராணுவம் எச்சரித்தது._68536549_68536394
அரசியலிலோ அரசு நிர்வாகத்திலோ ராணுவம் தலையிடாது. ஜனநாயக வரம்புக்குட்பட்டு தனக்கு அளிக்கப்பட்ட பணியை ராணுவம் நிறைவேற்றும். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் வேளையில் தேவையான நடவடிக்கையை எடுக்க ராணுவம் தயங்காது’ என எகிப்து ராணுவத்தின் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ செய்தியில் கூறப்பட்டிருந்தது.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ராணுவம் குரல் கொடுத்திருப்பதை எகிப்து மக்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இதேபோல், மோர்சியை எதிர்த்து போராடி வரும் புரட்சியாளர்களும் கெடு விதித்திருந்தனர்.
மோர்சி பதவி விலக வேண்டும் என நடத்தப்பட்டு வரும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 2 கோடியே 20 லட்சம் மக்கள் கையொப்பமிட்டனர்.
போராட்டக்காரர்களின் மீது அடக்குமுறையை ஏவி வரும் அதிபரின் போக்கை கண்டித்து எகிப்தின் சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி, தொலைத் தொடர்பு துறை மந்திரி, சுற்றுச் சூழல் துறை மந்திரி, சுற்றுலா துறை மந்திரி என 4 மந்திரிகள் தங்களது பதவியை  ராஜினாமா செய்தனர்.
தற்போது எகிப்தில் நடைபெற்று வரும் நிலவரமும், கலவரமும் 2011ம் ஆண்டு லிபியா அதிபர் கடாபியை பதவியை விட்டு வெளியேற்றிய மக்கள் புரட்சியை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது என உலக ஊடகங்கள் கவலை தெரிவித்தன.
ராணுவம் அளித்த 48 மணிநேர கெடு முடிவடைந்ததையடுத்து ராணுவ டாங்கி வாகனங்கள் தற்போது அதிபர் மோர்சியின் மாளிகையை முற்றுகையிட்டன.
ஆளும் கட்சியை சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முஹம்மது மோர்சி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கவும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் பொதுமக்களுக்கு பேட்டியளித்த ராணுவ தளபதி அப்டெல் பத்தா அல்-சிசி எகிப்து அதிபர் பதவியிலிருந்து முகம்மது மோர்சி வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மஹர் எல்-பெஹெய்ரி இடைக்கால அதிபராக நீடிப்பார் எனவும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பையடுத்து மக்கள் வானவேடிக்கைகளை நடத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்



இக்வான்கள் வைத்த பொறியில் இக்வான்களே விழுந்த மாய சூத்திரம்தான் என்ன? 

எகிப்தில் 80 வருட அனுபவம் எமக்கு உள்ளது என்று கொக்கரித்து அரசியல் லாபத்துக்காக மார்கத்தை விற்றுப்பிளைத்த இக்வான்கள் அரசியல் சாசன வரைபு குழுவில் இஸ்லாம் சார்ந்த எந்த அழுத்தங்களையும் செய்யவில்லை என்பது உலகறிந்த ஒன்று.

இக்வானிய போலி கிலாபா கோட்டையான எகிப்திலேயே யாப்பு வரைபை இஸ்லாமிய சாயலில் வரைவதற்கு அழுத்தமோ திருத்தமோ கொடுப்பதால் தமது ஆட்சிக்கு கவிழ்ப்பு நேரிடலாம் என்று பயந்த இக்வான்களும் இக்வானிய வறண்ட வாடிய சிந்தனையை சுவாசிப்பவர்களும் இலங்கையில் சிறுபான்மை நாட்டில் திருத்தத்துக்கு உள்ளாக இருக்கும் யாப்பின் 13 ஆம் திருத்த சட்ட மூலத்தில் அதிரடி அறிக்கைகள் கொடுப்பது ஆச்சரியக்குறியை தந்து நிற்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

கிலாபா என்ற பெயரில் டியூநிசில் பல லட்சம் இளைஞர்கள் உயிரை குடித்தவர்கள் கிலாபா இல்லை என்பதால் முழு உலக சமுதாயமும் காபிராகிவிட்டதாக பத்வா கொடுத்தவர்கள்(செய்யித் குதுப்) அதே பத்வாவின் பொறியில் தாங்களே விழுந்த மாய சூத்திரம்தான் என்ன? தான் வைத்த கன்னியில் தானே விழுந்த கதை தெரியுமா? அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள் “சூனியக்காரனுக்கே சூனியம் திரும்பியது” என்று.இக்வான்களுக்கு இது கண கச்சிதமாக பொருந்துகிறது.

ஆப்கானிஸ்தானில் ஐந்து வருடமாக சில புரிதல்கள் சரியோ பிழையோ அன்னியவனுக்கு அச்சப்படத தாரான்மைவாதத்துக்கு தலைகுனியாத ஆட்சி. பெயரிலேயே அச்சம் கொண்டது மேற்கு.அதுதான் தாலிபான்களின் இமாரா இஸ்லாமியா ஆட்சி.

ஐந்து வருட இந்த ஆட்சியையே நக்கலும் நையாண்டியும் செய்த இக்வான்கள் தமது கோட்டையில் இருப்பை ஒரு வருடத்துக்கு கூட தக்கவைப்பதில் தத்தளிக்கின்றனர்.

மற்றவர் ஆட்சியையும் கட்சியையும் விமர்சிக்க முன் தங்கள் ஆட்சியையும் கட்சியின் நிலை குறித்தும் மீள்பார்வை செய்யாதர்கள் தமது மீள்பார்வை இதழில் “ஷரீஆ”வுக்கும் “ஷரஈயா”வுக்கும் வித்தியாசம் தெரியாமல் எகிப்தில் ஷரீஆ வுக்காக இக்வான்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று தமிழ் உலக இக்வான்களை ஏமாற்ற கதை அளந்தவை எம்மனவலையை விட்டும் இன்னும் அகலாத தருணத்தில் 13 திருத்த சட்டத்தில் அடுத்த கட்சிகளை விமர்சிக்க கூப்பாடு போடுகின்றனர்.



Share this article :

+ comments + 1 comments

July 14, 2013 at 9:52 PM

பாவம் இந்த கிணற்றுத்தவளைகள்....இதுக்குதான் ஸ்கூலுக்கு கட்டடிகாம போக சொன்ன ...இப்ப வெளங்குதா ... pj da த நக்கி நக்கி இருக்காம வெளி உலகத்துலயும் என்ன நடக்குதுன்னும் கொஞ்சம் பாருங்க பாஸ்

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger