இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை அளிக்க வழி செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 80 கோடி பேருக்கு மிகக் குறைந்த விலையில் மாதம் 5 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.
உணவுப் பொருட்களின் விலை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும்.
இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் 20 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும். உலகில் செயல்படுத்தப்படும் மிகப் பெரும் உணவுத் திட்டமாகவும் இது இருக்கும்.
வருமாண்டில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்கு வங்கியை மனதில் கொண்டு அரசு இத்திட்டத்தை முன்னெடுப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் இந்தியாவில் கடும் போஷாக்கின்மை நிலவுகிறது, பட்டினிச் சாவுகள் அவ்வப்போது இடம்பெறுகின்றன. இந்த சூழலில் இந்த திட்டம் மிகவும் அவசியமானது என்று இதை ஆதரிப்பவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் பெருமானமுள்ள உணவுப் பொருட்கள் எலி கடித்தும், மழையில் நனைந்தும் நாசமாகின்றன.
Post a Comment