இந்தியாவின் நிபந்தனைகள் குறித்து பெருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மௌனம் காத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்து அந்நாட்டு அரசியல் தலைவர்களையும் ராஜதந்திரிகளையும் அமைச்சர் ராஜபக்ஷ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்த விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து அவர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென இந்தியா வலியுறுத்தியதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், இது குறித்து தகவல்களை வெளியிட முடியாது என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில விடயங்கள் பற்றி பகிரங்கமாக பேச முடியும் எனவும், சில விடயங்கள் பற்றி பகிரங்கமாக பேச முடியாது எனவும் இது இராஜதந்திர விவகாரங்களில் முக்கிய அம்சம் எனவும் அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Post a Comment