13வது அரசியலமைப்பு திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சில அதிகாரங்களை நாட்டுக்கு பொருந்தும் படியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இரத்துச் செய்ய போவதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அண்மையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறியுள்ளார்.
அரசில் இருக்கும் பெருபாலானவர்களும், பாதுகாப்புச் செயலா் கோத்தபாய உட்பட பாதுகாப்பு அதிகாரிகளும், மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொலிஸ் அதிகாரத்தை நீக்க வேண்டும் என்று தன்னிடம் கோரியுள்ளனர் எனவும் ஜனாதிபதி, தொண்டமானிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயமாக இந்தியா சென்றிருந்த அமைச்சர் தொண்டமான், இந்திய நிதியமைச்சர் பா. சிதம்பரத்தை சந்தித்து நடத்திய பேச்சுக்கள் பற்றி ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்காக அவரை சந்தித்த போது, ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
தொண்டமான் கடந்த முறை இந்தியா சென்றிருந்த போது, இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
எனினும், இம்முறை அவர் சோனியாவையே இந்திய பிரதமரையோ சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர் சிதம்பரத்தை 15 நிமிடங்கள் மாத்திரமே சந்தித்து பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
13வது அரசியலைமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கை அரசின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ள சிதம்பரம், அது தொடர்பில் தனது கடும் அதிருப்தியை , தொண்டமானிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய அமைச்சரின் அதிருப்தியை, அமைச்சர் தொண்டமான், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்த போது, சிதம்பரத்தை சரிப்படுத்தும் விடயத்தை அமைச்சர் பஷில் பார்த்து கொள்வார் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரம் ஒரு செல்வந்த வர்த்தகராவார், அவர் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ வர்த்தக பங்காளர் என்பதுடன், அமைச்சர் பஷில் ராஜக்ஸவின் உதவியுடன் இலங்கையில் பல மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளார்.
Post a Comment