இலங்கையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படலாம் என்று ஜே வி பி தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள மூன்று மாகாணசபைகளின் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக ஜே வி பி தலைவர் சோமவன்ச அமரசிங்கவை கோடிட்டு ஜேவிபி தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் சோமவன்ச அமரசிங்க, அரசாங்க அமைச்சர் ஒருவரை சந்தித்த போது இந்த விடயம் குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க தூதரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் அமைச்சரவையிலும் பேசப்பட்டுள்ளதாக ஜே வி பி தரப்பு குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் தமது ஆட்சியை நீடித்துக் கொள்வதற்காக இந்த முனைப்பை மேற்கொள்ளலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
Post a Comment