கிரிக்கெட் வீரரான எனது மகன் ரமித் ரம்புக்வெல, பிரித்தானிய விமான சேவைக்குரிய விமானத்தில் முகம் கொடுத்தது ஒரு சின்ன விடயமாகும் என்று ரமித் ரம்புக்வெல்லவின் தந்தையும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது ஒரு சிறிய விடயமாகுமென அந்த விமான சேவை நிறுவனமே கூறியிருக்கின்றது. இந்நிலையில் இலங்கை ஊடகங்கள், டெய்லி மெயிலில் வெளியான செய்திக்கு கடும் பாரத்தை கொடுத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு திரும்பியவுடன் இதுதொடர்பில் மகன் என்னிடம் கூறினார். விமானத்திலிருந்தவர்களிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவித்தார் என்றும் மகன் என்னிடம் தெரிவித்தார் என்றார்.
விமானத்தின் பின்னால் உள்ள கதவிற்கும் மலசல கூட கதவிற்கும் இடையில் இரண்டு மீற்றர் தூரம் கூட இல்லை. யாருக்கும் இவ்வாறான தவறுகள் இடம்பெறலாம். இதற்கு முன்னரும் இவ்வாறான தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன. எதிர்காலத்திலும் இவ்வாறான தவறுகள் இடம்பெறலாம் என்று பிரித்தானிய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் இலங்கை கிரிக்கெட் முன்னெடுக்கின்ற விசாரணைக்கு நான் ஆதரவளிப்பேன் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு சிறிய விடயமாகும் என பிரித்தானிய விமான சேவை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்ற நிலையில் சகல ஊடகங்களிலும் டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் இருந்த விடயம் மட்டுமே இருப்பது கண்டிக்கத்தக்கதாகும். டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் 23 வயதான ஒருவர் மதுபோதையில் சத்தம் போட்டதாக இருக்கின்றது. அதனையே ஊடகங்கள் எடுத்துக்கொண்டுள்ளன.
பிரித்தானிய விமான சேவையின் அறிக்கை எனது கையில் இருக்கின்றது. இந்த சம்பவமானது சிறிய விடயமென அதில் இருக்கின்றது. இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் எதிர்காலத்திலும் இடம்பெறலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment