கொழும்பு மாவட்டத்தில் கடுவெல மாநகரசபைக்குரிய கிராம சேவகர் பிரிவுகளில் பணியாற்றும் 57 கிராம சேவகர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளை அமைச்சர் விமல் வீரவன்ச வழங்கியதாகவும் அது லஞ்சம் வழங்கியதற்கு ஈடானது என மாநகர சபையின் முதல்வர் ஜி.எச். புத்ததாச தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான லஞ்சத்தை வழங்குவது பாரதூரமானது எனவும் இது பற்றி லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தேர்தல் ஆணையாளர், பொது நிர்வாகம் உள்நாட்டலுவலகள் அமைச்சிடம் முறையிடப் போவதாகவும் புத்ததாச மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment