“சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் நடாத்துவோம்” பொதுபல சேனா போர் முரசு! பச்சை கொடி காட்டுமா இலங்கை அரசு?


ஜூலை மாத அழைப்பு மாத  இதழின் ஆசிரியர் தலைப்பு

எதிர் வரும் ஜூலை மாத எசல போயாவிற்கு முன்பாக இந்நாட்டில் இயங்கும் சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாங்கள் இந்நாட்டின் உத்தியோக புர்வமற்ற காவல் துறையினர் என்ற ரீதியில் சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வோம். இனிவரும் காலங்களில் சிங்களக் கிராமங்களுக்குள் நுழையும் அந்நிய இனத்தவர்களை அடித்து விரட்டும் நோக்கில் பௌத்த பாதுகாப்பு குழுவொன்றை அனைத்து சிங்களக் கிராமங்களிலும் உருவாக்கப் போகிறோம்.

இது கடந்த 28/06/2013 அன்று பொது பல சேனாவின் தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவ்வமைப்பின் கலபொட அத்தே ஞான சார எனும் பச்சை இனவாதியால் உதிர்க்கப்பட்ட விஷக்கருத்துக்களில் சில.

உலக மதங்கள் அனைத்தையும் அழித்தொழித்து விட்டு, ஷைத்தானை (Lucifer) மட்டும் புஜிக்கக் கூடிய தியோஸொபி (Theosophical Society)’ எனும் மதக் கருத்துக்களை ஆசியாவில் விதைப்பதற்காய் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த ஹென்ரி ஹோல்கட் (Henry Steel Olcott) மற்றும் அவரது மனைவி ஹெலேனா பிலாவட்ஸ்கீ (Helena Blavatsky) ஆகியோரின் கையாலாக மாறி டொன் டேவிட் ( Don David Hewavitarne) எனும் கிரிஸ்தவனாக இருந்து, ஆசிய மதங்களை அழிப்பதற்காகவே பௌத்த வேடம் புண்ட அனகாரிக தர்மபால (Anagarika Dharmapala) என்பவரால் 1900 ஆம் ஆண்டுகளில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கெதிராய் பரப்புரை செய்யப்பட்ட பச்சை இனத்துவேச கருத்துக்களின் இறுதி வடிவம் தான் இன்று பொது பல சேனா எனும் இனவாத அமைப்பின் ஞான சார உள்ளிட்ட சில காவிக்காடையர்களின் வாயிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதே வரலாற்று ரீதியான மறுதலிக்க முடியாத உண்மை.

முஸ்லிம்கள் என்பவர்கள் அரேபியாவிலிருந்து இந்நாட்டு வளங்களை சுரண்ட வந்த வந்தேறு குடிகள்! நடைபாதை வியாபாரிகள்! பௌத்த மக்களின் இதிகாசங்களை இல்லாதொழித்தவர்கள்! மிருக வதை புரிபவர்கள்! என்றெல்லாம் அனகாரிக தர்மபால அன்று ஆரம்பித்து வைத்த அதே பள்ளவியையே பொது பல சேனா உள்ளிட்ட இனவாத அமைப்புகள் இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

பொது பல சேனாவின் அமெரிக்க விஜயத்தோடு முஸ்லிம்களுக் கெதிரான துவேச செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் முஸ்லிம் தலைவர்களை அழைத்து உறுதி மொழி அளித்தார். ஹலாலை மட்டும் விட்டுக் கொடுத்தால் ஏனைய பிரச்சினைகள் தானாக ஓய்ந்து விடும் என்று எம்மவர்களும் தூர நோக்கின்றி முடிவெடுக்க ஆரம்பித்தனர். பொது பல சேனாவின் உருவாக்கம், கொள்கை, கோட்பாடுகள், பின்னணியில் உள்ள சக்திகள், உள்நாட்டு சர்வதேச வலை பின்னல் குறித்த எவ்வித ஆய்வறிவும் அற்ற மேதாவிகள் பொது பல சேனா வந்த வேகத்தில் அழிந்து விடும் என்று மனப்பால் அறுந்தினர். மக்கள் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்று முஸ்லிம் சமூகம் ஒன்றிருப்பதையே மறந்து வாழும் முஸ்லிம் (?) அரசியல் வாதிகள் பதவிக்கதிரைகளை பாதுகாப்பதில் செலுத்திய அக்கறையில் கால் பங்கையாவது எம் உரிமைகளை காப்பதற்கு செலுத்தவில்லை. எதிர்ப்புகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்த உபாயத்தை எடுத்தியம்ப வேண்டிய உலமாக்கள் அடக்கி வாசிப்பதும், அடங்கிப்போவதும், துஆ செய்வதும் மட்டுமே சமயோசிதம் என்று ஹூதைபியாவை ஆதாரமாய் எடுத்துக்காட்டி தங்கள் கோழைத்தனத்துக்கு மார்க்கச் சாயம் புசி தப்பிக்கொண்டனர்.

அனைத்துத் தரப்பினரதும் எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கும் விதமாய் பொது பல சேனாவின் இனத்துவேச செயற்பாடுகள் முன்பை விட பன்மடங்கு இன்று அதிகரித்த வண்ணம் உள்ளன. 9/06/2013  அன்று அம்பாரையில் நடந்த பொதுக்கூட்டம், 15/06/2013  அன்று பதுள்ளையில் நடந்த வருடாந்த ஒன்று கூடல், அவ்வப்போது மேற்கொண்ட முற்றுகைகள் மற்றும் ஊடக வாயிலாக நாட்டு மக்களுக்கு விடுத்த அறிக்கைகள் யாவும் இந்நாட்டு முஸ்லிம்களின் உரிமைகளையும், அவர்களின் பொருளாதார வளத்தையும் கேள்விக் குறியாக்கும் விதமாய் அமைந்திருந்தன. முஸ்லிம்கள் தான் இந்நாட்டின் அமைதியை அழிக்கும் அடிப்படைவாதிகள்! எனவே இவர்கள் அழிக்கப்பட வேண்டிவர்கள்! இந்நாட்டை விட்டும் துரத்தியடிக்கப்பட வேண்டியவர்கள்! முஸ்லிம்களை ஒழிக்கும் இப்புண்ணிய காரியத்தில் பங்கு கொள்வது அனைத்து பௌத்தர்களினதும் கடமை! என்று மேடைகள் தோரும் கூப்பாடு போட்டு தங்களின் எண்ணத்திற்கேற்ப செயற்பட விரும்பும் ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டனர். சிங்கள ராவய, ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புகள் பன்மடங்கு வீரியத்துடன் செயற்பட ஆரம்பித்துள்ளன. முஸ்லிம்களின் இருப்பால் கிழக்கு வாழ் தமிழர்களுக்கும் ஆபத்தே! என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டதோடு, இந்தியாவில் முஸ்லிம்களை கருவறுக்கும் விதமாய் செயற்படும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளான விஷ்வு ஹிந்து பரிசத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கிளைகளும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. எல்லாளன் திராவிட சேனைஎன்ற பெயரில் கிழக்கில் வாழும் தமிழர்களிடம் முஸ்லிம்கள் குறித்த வெறுப்புணர்வை விதைக்கும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நன்கு திட்டமிடப்பட்ட  காய் நகர்த்தல்கள் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் குறித்த வெறுப்புணர்வு லாவகமாய் பெரும்பான்மை மக்களிடம் விதைக்கப்பட்டு விட்டது. இதில் பொது பல சேனா உள்ளிட்ட இனவாதிகள் வெற்றி கண்டுவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக தீக்குளித்து இறந்து போன தேரரின் மரணம் இனவாதிகளின் பிரச்சாரத்திற்கு எண்ணெய் வார்ப்பதாய் அமைந்துவிட்டமை முஸ்லிம் விரோத போக்கின் வேகத்தில் ஏற்பட்ட திருப்பு முனையென்றே சொல்லலாம். தெற்கிலிருந்து கொழும்பு வரை மாடறுப்பை எதிர்த்து சிங்கள ராவய அமைப்பினர் அனகாரிக தர்மபாலவின் பாணியில் மேற்கொண்ட பாத யாத்திரை பாரிய அதிர்வுகளை பெரும்பான்மை மக்களின் உணர்வுகளில் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.

இத்தனை திட்டமிடலின் மூலமும் முஸ்லிம் விரோத உணர்வு அனைவர் உள்ளத்திலும் விதைக்கப்பட்டு விட்டது. இனி எஞ்சியிருப்பது குஜராத் மற்றும் மியன்மார் பாணியில் முஸ்லிம்களுக்கெதிராய் கலவரத்தைத் தூண்டி முழுமையான இனச்சுத்திகரிப்பை அரங்கேற்றுவது மட்டுமே! இனவாதிகளின் இவ்விறுதி இலக்கை அடைவதற்கான அறைகூவலாகவே சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வோம்என்ற பொது பல சேனாவின் பகிரங்க அறிவிப்பு அமைந்துள்ளது. முஸ்லிம்களை கருவறுப்பதற்கான காலமும் நேரமும் தீர்மானிக்கப்பட்டு விட்டது. பெரும் பான்மை சமூகத்திலுள்ள இனவாதிகள் போர் முரசைக் கேட்டு முன்னாயத்தப்பணிகளில் இறங்கியிருப்பர். அழிக்கப்பட வேண்டிய இலக்குகள் ஏலவே தீர்மானிக்கப்பட்டிருக்கும். 

இனவாதிகளின் இத்துணை செயற்பாடுகள் அப்பட்டமாய் அரங்கேரிய போதும் இந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு உட்பட ஆளும் அரசு ஒன்றுமே நடைபெறாதது போன்று அமைதி காப்பதன் மர்மம் தான் என்ன? பொது பல சேனாவின் செயற்பாடுகளை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் குரல் கொடுக்க முனைந்த போதெல்லாம், ‘இதை இப்போதைக்கு செய்ய வேண்டாம்! பொது பல சேனாவை நாம் பார்த்துக் கொள்கின்றோம்!என்று கூறி அவர்களின் பொதுக் கூட்டங்களை தடுத்து, ர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்தது பாதுகாப்பு அமைச்சு. ஆனால், சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு, ‘நாங்கள் உத்தியோக புர்வமற்ற போலிஸ் காரர்கள்! இனிவரும் காலங்களில் சிங்களக் கிராமங்களுக்குள் நுழையும் அந்நிய இனத்தவர்களை அடித்து விரட்டும் நோக்கில் பௌத்த பாதுகாப்பு குழுவொன்றை அனைத்து சிங்களக் கிராமங்களிலும் உருவாக்கப் போகிறோம்!என்று அப்பட்டமாய் அறிவித்து விட்டு தங்களது அடுத்த நடவடிக்கைக்கான திகதியையும் குறிப்பிட்டு செயற்படுகிறார்கள் இந்த இனவாதிகள். ஆனால், பாதிக்கப்பட்ட முஸ்லிம் தனக்கு நியாயம் கோரி குரல் எழுப்ப முனைந்த போது அவர்களின் குரல் வளையை நசுக்குவதற்கு விரைந்த பாதுகாப்பு அமைச்சும், அரச பரிவாரங்களும் சட்டத்தையே மீறி தான்தோன்றித்தனமாக செயற்படும் பொது பல சேனா உள்ளிட்ட இனவாத அமைப்புகளை ஏன் தடுத்து நிறுத்துவதற்குத் திராணியிழந்து நிற்கிறது?


பாதுகாப்புச் செயலாளரினதும், அரச ஆதரவினதும் அரவணைப்பில் தான் பொது பல சேனா என்ற அமைப்பு பாலூட்டி வளர்க்கப்படுகிறதோ என்று அனைவர் உள்ளத்திலும் கேள்விக் குறியாய் இருந்த ஐயம் அது பொய்யல்ல! உண்மை தான்! என்பதை இவர்கள் நடந்து கொள்ளும் விதமே ஊர்ஜிதப்படுத்துவதாய் அமைந்துள்ளது. முஸ்லிம்களுக்கெதிராய் ஏதுமென்றால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று அறிக்கைவிட்ட ஜனாதிபதி ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தின் ஒரு சில  உரிமைகளையாவது பாதுகாக்கும் விதமாய் ஏட்டளவில் இருந்த 13 ஆம் திருத்தச் சட்ட மூலத்தை கூட மாற்றியமைப்பதற்கு சகுணம் பார்த்துக் கொண்டிருப்பதும், மத மாற்ற மற்றும் மாடறுப்புக்கு எதிரான மசோதாவை நடைமுறைக்கு கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்து வருவதும் ஜனாதிபதியின் நம்பகத்தன்மையில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் முஸ்லிம்களுக்கெதிரான இனச்சுத்தீகரிப்பை பொது பல சேனாவை வைத்து அரசு அமுல் படுத்தப் போகிறது என்பது மட்டும் தெளிவாக ஆரம்பித்துள்ளது. போர் முரசும் கொட்டப்பட்டு, பச்சை கொடியும் காட்டப்பட்டு விட்டது. இனி மியன்மாரின் காட்சிகளை எங்கும் பரவலாக காண முடியும். எம் உம்மத்தை காக்கும் காவலர்கள் தான் இன்னும் குரட்டை விட்டு உரங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger