எகிப்தின் முன்னணி லிபரல் அரசியல் தலைவர் மொஹமட் எல்பராதே பிரதமராக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு அரச உயர் மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
இஸ்லாமியவாத அதிபர் மொஹமட் மொர்ஸி பதவிகவிழ்க்கப்பட்டு மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில், பிரதமராக எல் பராதே நியமிக்கப்படவுள்ளதாக எகிப்தின் அரச செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அவரது ஆதரவாளர்களும் கடந்த மூன்று நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.மொர்ஸியை பதவி நீக்குவதற்காக எதிரணியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐநாவின் அணு கண்காணிப்பு அமைப்பின் முன்னாள் தலைவரான எல் பராதே இடது சாரி லிபரல் கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment