தற்போது விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்ற ரமித் ரம்புக்வெல என்ற வீரர் நாட்டை பற்றியோசித்து பொறுப்புடன் நடந்திருக்கவேண்டும் என்று தெரிவித்த மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கதவுகளுக்கு வித்தியாசம் தெரியாதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
நானும், விமானத்தில் பயணம் செய்திருக்கின்றேன்.மலசல கூட கதவிற்கும், விமானத்தின் கதவிற்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறியதில்லை. தெரியாத விடயம் இருந்தால் விமான பணியாளர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்வதில் எவ்விதமான தவறும் கிடையாது. கதவுகள் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனதை நினைத்துக்கூட பார்க்கமுடியாமல் இருக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பத்திரிக்கைகளின் ஊடாகவே நான் அறிந்துக்கொண்டேன்.
அவர், மதுபோதையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அது உண்மையாயின் அமைச்சரின் மகனாக அல்ல நாட்டை பிரதிநித்துவப்படுத்துகின்ற விளையாட்டு வீரர் என்றவகையில் பொறுப்புடன் நடந்திருக்கவேண்டும். இளைஞர் காலத்தில் நாமும் பல விடயங்களை செய்திருக்கின்றோம்.
அமைச்சரின் பிள்ளைகள் மிகவும் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று எங்களது தந்தையைவிடவும் ஆசிரியையான எங்களுடைய அம்மாவே அடிக்கொருத்தடவை அறிவுரை கூறிக்கொண்டு இருப்பார் என்றும் அவர் சொன்னார்.
Post a Comment