எதிர்வரும் ஒகஸ்ட் 1ம் திகதி தொடக்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவது தடை செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
எனினும் வெளிநாடு செல்ல விரும்பும் பெண்கள் பயிற்றப்பட்டு ´வீட்டு உதவியாளர்களாக´ மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு அனுப்பப்படும் பெண்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு தெளிவூட்டப்பட்டு அனுப்பப்படுவதோடு அவர்களின் பெயர்களும் மாற்றப்படும் என டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (10) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் டிலான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாடு செல்லும் இலங்கை பணிப்பெண்கள் அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்தும் அதுபற்றி வெளியாகும் செய்தி குறித்தும் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியபோது, அவை அனைத்தும் பொய்யான தகவல் என அமைச்சர் டிலான் பெரேரா பதிலளித்தார்.
Post a Comment