- அஹ்மத் ஜம்ஷாத்(அல் அஸ்ஹரி) -
ஹுஸ்னி முபாரக் அரசு வீழ்ந்தபோது ராணுவம் எப்படி சிவில் அரசிடம் நாட்டின் நிருவாகத்தை ஒப்படைத்தோ அதேபோலவே இப்போதும் ராணுவம் சிவில் அரசிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைத்துள்ளது.
இந்த புரட்சியை மக்கள் புரட்சி என்று ஏற்றுக்கொண்டவர்கள் இக்வானிய அரசுக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சியை இராணுவ புரட்சி என்று சொல்கின்றனர். இது எந்தவகையில் சரி என்று தெரியவில்லை.
ஹஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ்ப்பின் பின்பு ராணுவம் செயல்பட்ட முறையை யாரும் இராணுவ புரட்சி என்று சொல்லவில்லை.(ஒரு சில காலமாக இராணுவ ஆட்சி இருந்து பின் சிவில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது)
ஆனால் இக்வானிய அரசு வீழ்ந்தபோது அது இராணுவ புரட்சி என்று சொல்வது பல காரணங்களால் தவறு.
ஒன்று : இக்வானிய ஆட்சியை ராணுவம் கைப்பற்றுவதாக இருந்தால் இக்வானிய ஜனாதிபதிக்கு தீர்க்கமான முடிவெடுக்க ஒன்பது நாள் கெடு ஒன்றை ரானுவம் கொடுத்திருக்க மாட்டது.
இரண்டு: ராணுவப்புரட்சி என்று சொன்னால் இராணுவமே நாட்டின் நிர்வாக பொறுப்பை ஏற்றுகொணடிருக்கும் நிலை உருவாகி இருக்கும்.ஆனால் ராணுவம் அப்படி செய்யாமல் அனைத்து தரப்பு அரசியல் மார்க்க நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்து ஷூரா முறையில் ஆலோசித்து சிவில் அரசிடம் ஆட்சியை கொடுத்துள்ளது.ராணுவத்தின் அழைப்புக்கு இக்வானிய தரப்பு செவி சாய்க்கவில்லை என்பது வேறு விஷயம்.
ஹுஸ்னி முபாரக் வீழ்ச்சியின்பின் சில கட்டங்களில் ராணுவம் மேற்கொண்ட அரசியல் முறையை இராணுவ புரட்சி என்று சொல்ல முடியும்.அந்த ராணுவம் சிவில் துறையினருடன் ஆலோசனை பெற்று ஆட்சியை வைத்துகொள்ளவில்லை.சிவில் துறையினருக்கு சிவில் அரசுக்கு ஆட்சியின் பொறுப்பை கொடுக்கவும் இல்லை என்பது இதற்கு காரணமாகும்.கடைசிவரை இராணுவ தலைமயின் கீழே புரட்சி அரசு ஒன்று ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டது.
பொதுவாக எந்த ஒரு அரசுக்கு எதிராகவும் நடக்கும் மக்கள் புரட்சியின்போது ராணுவத்தின் நிலை எப்படி இருக்க வேண்டும் ?
ஹுஸ்னி முபாரக் ஆட்சியில் ஏற்பட்ட மக்கள் புரட்சி போன்று ஒன்று ஏற்பட்டபோது ராணுவம் எந்த முடிவை எடுத்ததோ அந்த முடிவையே இக்வானிய அரசுக்கும் ராணுவம் எடுத்ததுள்ளது.
ராணுவம் இக்வானிய அரசுக்கு எதிராகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளது என்று சொல்வதைவிட எந்த அரசுக்கு எதிராக மாபெரும் புரட்சி ஏற்பட்டு அது தீர்வுகள் இல்லாமல் குழப்பத்தில் முடியும் என்று ராணுவம் கருதினால் நாட்டின் பாதுகாப்பு கருதி நாட்டின் பாதுகாப்பு பொறுப்பில் உள்ள ராணுவம் இந்த முடிவையே எடுக்கும்.
இக்வானிய அரசுக்கு எதிராக மக்கள் வெள்ளம் கொந்தளித்தது உண்மை.இதை இக்வான்கள் பக்கசார்பு இல்லாத ஊடகம் என்று சொல்லும் ஜஸீரா செய்தி நிறுவனமே குறிப்பிட்டும் உள்ளது.அவர்கள் அந்த உண்மையை சொன்னதால் சில இஸ்லாமிய அமைப்பினரால் விமர்சிக்கபட்டும் உள்ளனர்.
போராட்டகாரர்கள் கோரிக்கை நியாயமா இல்லையா என்பதை ஆர்பாட்ட களத்துக்கு முன்பே ஆராய வேண்டுமே தவிர ஆர்பாட்டம் பொங்கி வலிந்து நாடு குழப்பத்தில் மூழ்கும் நிலை ஏற்படும்போது மக்கள் கோரிக்கை சரியா பிழையா என்று ராணுவம் பார்க்கவே பார்க்காது.
குழப்பத்தை தணிக்க அரச மாற்றீடு ஒன்றே தீர்வு என்றால் அதை சிவில் முறையில் செய்து முடிக்கும் பொறுப்பு பாதுகாப்பு பொறுப்பில் உள்ள ராணுவத்தை சார்ந்தது.
ராணுவம் ஆட்சி மாற்றத்தில் பங்காளி என்பது உண்மையே.நாட்டில் இரத்த ஓட்டத்தை தணிக்க இதுவே சரியான முடிவு என்று ரானுவம் கருதியது.இரத்த ஓட்டத்தை ராணுவம் விரும்பி இருந்தால் இராணுவமே மக்களை ஒடுக்கி ஆட்சியை தன்னகபடுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால் ஆட்சியை சிவில் அரசிடம் ராணுவம் கொடுத்ததில் இருந்து இது இராணுவ புரட்சி என்று சொல்வது பிழையானது.
ஆட்சி கவிழ்ப்புக்கான பிரதான காரணங்கள்
இக்வானிய அரசு வீழ்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இளைஞர்களை கொண்ட “ஹரகது தாமர்றுத்” என்ற “கிளர்ச்சி அணி” யினரின் அரசுக்கு எதிரான பல மில்லியன் கையொப்பம் இடும் திட்டம்.
இந்த திட்டத்தில் அரசுக்கு எதிராக 22 மில்லியன் கையொப்பம் இடப்பட்டதாக அந்த இயக்கம் அறிவித்தது. இது உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால் இந்த அறிவிப்பு கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையை இன்னும் உறுதிப்படுத்தியது மட்டும் அல்லாமல் இக்வானிய அரசுக்கு எதிராக புரட்சியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தியது. இவர்களின் இந்த கையொப்பம் இடும் திட்டத்தின் விபரீதம் அறியாமல் இத்திட்டம் வெற்றி அளிக்காது என்று இக்வானிய அரசு அலட்சியம் செய்து வந்தமை இக்வானிய அரசுக்கு எதிராகவே அமைந்தது.
அரசுக்கு எதிராக அதிக பங்குவகித்த நிறுவனம் ஊடகமாகும். இந்த வாய்ப்பை முபாரக்கின் எச்ச சொச்சங்களும் நன்றாகவே பயன்படுத்தினர்.
இந்த இரண்டு பிரதான காரணங்கள் அல்லாத பல விடயங்கள் ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமாக அமைந்தன அவை:
புரட்சி அரசுக்குரிய பண்புகள் நடைமுறைப்படுத்தப்படாமை.அதில் முக்கியமாக முர்சி அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின்பும் முபாரக்கின் எச்ச சொச்சங்கள் உயர் பதவிகளில் தொடர்ந்து இருந்துவந்தமை.
முர்சியினால் எடுக்கபட்ட பல முடிவுகள் தவறு என்று சில மனித்தியாலங்களிலேயே முர்சியினால் வாபஸ் வாங்கபட்டமை.இது தொடரச்சியாக நடந்தே வந்தது.
அரச துறைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இக்வானிய ஆதிக்கம் நுழைவிக்கபட்டமை.
ஹுஸ்னி முபாரக் காலத்தில் அல்லாத தொடர்ச்சியான மின்சார துண்டிப்பு
ஹுஸ்னி முபாரக் காலத்தில் அல்லாத பெட்ரோல் தட்டுப்பாடு
ஹுஸ்னி முபாரக் காலத்தில் அல்லாத கேஸ் தட்டுப்பாடு
ஹுஸ்னி முபாரக் காலத்தில் அல்லாத பெட்ரோல் தட்டுப்பாடு
ஹுஸ்னி முபாரக் காலத்தில் அல்லாத கேஸ் தட்டுப்பாடு
இவை சிலபோது லெபரல்களின் திட்டமிட்ட சதியினால் ஏற்பட்டதாக கருதினாலும் பொதுமக்கள் இக்வானிய அரசின் தவறாகவே இதை கருதினார்கள்.மீடியாக்களும் அவ்வாறே அதை மக்களுக்கு போதித்தது.
ஆட்சி கவிழ்ப்புக்கான காரணங்கள் தடுக்கப்பட்டிருக்க முடியுமாக இருந்தும் அதை செய்யாமை.
அரசை வீழ்த்த சட்டப்படி அல்லாத கையொப்பம் இடும் திட்டத்தை “கிளர்ச்சி அணி” அறிவித்த உடனே இக்வானிய அரசு அந்த திட்டத்தை தடுத்திருக்க வேண்டும்.ஆனால் அதை இக்வானிய அரசு பொருட்டாக கருதவில்லை.அதுவே அவர்கள் ஆட்சிக்கு எதிராக அமைந்தது.
லெபறல் ஊடககங்கள் செய்யும் இஸ்லாமிய எதிர்ப்பு செய்திகளை ஒடுக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டம் இக்வானிய அரசிடம் இல்லாமை.ஊடகத்துறை அமைச்சு முற்று முழுதாக இக்வானிய அமைச்சர் ஒருவர் கையிலேயே இருந்தும் ஊடக சீர்கேட்டை தடுக்காமை இக்வானிய அரசு செய்த மிகப்பெரிய தவறு.
முர்சி அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் பாராளுமன்ற தேர்தல் ஒன்றை நடத்திமுடிக்காமை ஆட்சிகவிழ்ப்புக்கு ஒரு காரணமாக அமைந்தது.பாராளுமன்றம் ஒன்று இல்லாததன் காரணமாகவே அரசின்மீது உள்ள நம்பிக்கை இல்லா பிரேரணையை மக்கள் கையொப்பம் மூலம் தமது கையில் எடுத்துகொன்டனர்.
பாராளுமன்றம் ஒன்று இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு பிரேரணையும் பாராளுமன்றம் மூலமே நடந்திருக்கும்.அதன் ஊடாகவே இக்வானிய அரசின் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருக்கும்.இதில் பாராளுமன்றம் இஸ்லாமியர் கையில் ஓங்கி இருப்பதற்கான வாய்ப்பும் இருந்திருக்கும் எனவே அந்த லெபரல் வாதிகளின் பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருகும்.
தீர்வுகள் இருந்தும் அலட்சியம் செய்த இக்வானிய அரசு
மக்கள் ஆணை பெற்ற தமது அரசு வீழாமலே மக்களின் கொந்தளிப்பை தவிர்த்து தீர்வுகள் முன்வைக்க இக்வானிய அரசால் முடியுமாக இருந்தும் அதை இக்வானிய அரசு செய்யவே இல்லை.
இக்வானிய அரசுக்கு ஆட்சில் இருந்தவாரே பல தீர்வுப்பொதிகளை முன்வைத்திருக்க முடியும்.
எப்படியோ மக்கள் வெள்ளம் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடிவிட்டது.அதன் பின்பாவது அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. ஜனாதிபதி முர்சி அவர்கள் ஆட்சியில் இருந்தவாறே சில காத்திரமான பொருப்புணர்ச்சியான தீர்வுகள் வைக்க முடியுமாக இருந்தன அவை கீழ்வறுமாறு:
ஒன்று: தனக்கு ஆதரவு உள்ளதா இல்லையா என்பதை நிரூபிக்க சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை அறிவித்திருக்க வேண்டும்.
இரண்டு: ராணுவமும் மக்களும் சில அரசியல்வாதிகளும் சொன்னதற்கு இணங்க உடனடியான ஜனாதிபதி தேர்தல் ஒன்றை அறிவித்திருக்க வேண்டும்.
மூன்று:உடனடி பாராளுமன்ற தேர்தலை அறிவித்திருக்க முடியும்.
இந்த மூன்று விடயங்களில் சர்வஜன வாக்கெடுப்பும் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பும் நடந்திருந்தால் போராட்டகாரர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.அதேவேலை ராணுவம் இக்வானிய அரசுக்கு ஓரளவு ஒத்துலைப்பும் கால அகவாசமும் கொடுத்திருக்கும்.
போரட்டகாரர்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்ற இக்வானிய அரசு தயாராகவும் இருக்கவும் இல்லை அதே நேரம் அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் கட்சிகளும் ராணுவமும் முன்வைத்த ஆலோசனைகளை பரிசீலிக்கவும் இல்லை.எனவே ராணுவம் பிரச்சினை அல்லாத மாற்று யோசனையை தருமாறு முர்சிக்கும் போராட்ட காரர்களுக்கும் கால அவகாசத்துடன் வேண்டுகோள் விடுத்தது.அது தோல்வி அடைந்ததன் விளைவு இக்வானிய அரசு வீழ்ந்தது.
புதிய சிவில் அரசு ஒன்று இக்வான்கள் விரும்பியோ விரும்பாமலோ உருப்பெற்றது.எனவே இது இராணுவ அரசோ இராணுவ புரட்சியோ அல்ல,மாறாக மக்கள் ஆணையுடன் கூடிய அரசை மீண்டும் உருவாக்க தற்காலிகமான ஒரு சிவில் அரசே தற்போது ஏற்பட்டுள்ளது.இந்த அரசு உருவாக மிகப்பெரும் சர்வதேச பலகலைகழகமான அல்அஸ்ஹர் பல்கலைகழகம் உட்பட அனைத்து கட்சிகளும் அழைக்கபட்டன.மாறாக ராணுவம் தன்னிச்சையாக இந்த முடிவை அறிவிக்கவில்லை.ராணுவம் தீர்வை இக்வான்களிடம் கேட்டு நின்றனர் இக்வானிய அரசு தீர்வு எதுவும் வைக்காததன் விளைவு தீர்வை எடுக்கும் தலைமையை ராணுவம் ஏற்றுகொண்டது.ராணுவத்தின் பாதுகாப்பில் தற்காலிக சிவில் அரசு உருவாகியது.
எகிப்தின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்திகளில் இரண்டு பிரதான சக்திகள் உள்ளன அந்த இரண்டு தரப்புமே நாட்டின் ஆட்சியில் சுழற்சிமுறையில் வருவார்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.இது எந்த ஜனநாயக நாட்டுக்கும் பொருந்த கூடிய ஒன்றே.
ஆட்சி லெபறல் வாதிகள் கையில் உள்ளது என்று சொல்ல முடியுமே தவிர இது ராணுவ புரட்சியா இல்லையா என்று பார்த்தால் ராணுவ புரட்சியோ இராணுவ ஆட்சியோ அல்ல.
Post a Comment