பிரிட்டனில் மார்பு புற்றுநோய் இருந்துள்ள குடும்ப-வழியைச் சேர்ந்த பெண்களுக்கு மார்பு புற்றுநோய் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கமுடியும் என்ற அரச பரிந்துரை வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் மருத்துவ-சுகாதார சிறப்பு பராமரிப்புக்கான தேசிய நிறுவனம் என்ற அரச அமைப்பு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.
பிரிட்டனில், வழமையில் ஏற்கனவே மார்பு புற்றுநோயால் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு மட்டுமே மருந்து கொடுக்கப்பட்டுவந்தது.ஐரோப்பாவில் ஆரோக்கியமாக இருக்கும் பெண்களுக்கும் மார்பு புற்றுநோயைத் தடுப்பதற்கான மருந்துகளை வழங்கமுடியும் என்ற பரிந்துரையை பிரிட்டன் அரசே முதலில் வெளியிட்டுள்ளது.
மார்பு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமுள்ள பெண்கள் மிகவும் உன்னிப்பான மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள்.
அவர்கள் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க இரண்டு மார்பகங்களையும் முன்கூட்டியே அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக் கொள்ளும் சிகிச்சை முறையும் உள்ளது.
புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி தனக்கு மார்பு புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக இரண்டு மார்பகங்களையும் அகற்றிக் கொண்டதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
குடும்ப-வழியாக மார்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகளவில் இருந்ததாலேயே அவர் இந்த அறுவை சிகிச்சையை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment