ஆஸ்திரேலியா புதிய பிரதமரானார் மீண்டும் கெவின்ரூத்: வாக்கெடுப்பில் கிலார்டு தோல்வி


Kevinமெல்போர்ன்: ஆஸ்திரேலியா புதிய பிரதமராக மீண்டும் கெவின்ரூத் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரதமராக ஜூலியா கிலார்டு பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு பிரதமராக இதே தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவரான கெவின்ரூத் பதவி விலகியதை அடுத்து ஜூலியா கிலார்டு பிரதமராக பொறுப்பேற்றார்.
ஆஸ்திரேலியாவில் சமீப காலமாக தொழிலாளர் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கிலார்டு தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை இருந்தது. இதையடுத்து பிரதமரை மாற்றுவதற்காக பாராளுமன்ற கூட்டம் நடந்தது.
பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் 72 எம்.பி.க்களை கொண்ட முக்கிய எதிர்க்கட்சித்தலைவரான டோனி அபோட் கூறுகையில் புதிய அரசு அமையுங்கள் இல்லையெனில் பொதுத்தேர்தலை அறிவியுங்கள் என்றார்.
வாக்கெடுப்பில் கிலார்டு தோல்வி
இதையடுத்து மக்கள் பிரதிநித்துவ ச‌பையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முன்னாள் பிரதமரான கெவின்ரூத்திற்கு ஆதரவாக 57 ஓட்டுக்களும் கிலார்டுக்கு ஆதரவாக 45 ஓட்டுக்களும் கிடைத்தன. ஆஸி பாராளுமன்றத்தில் மொத்தம் ‌150 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் தொழிலாளர் கட்சிக்கு (லேபர் கட்சி ) 71 எம்.பி.க்கள் தான் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 76 எம்.பி..க்கள் தேவை என்பதால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கிலார்டு பிரதமராக பதவி வகித்து வந்தார்.
ந்நிலையில் புதிய பிரதமருக்காக நடந்த வாக்கெடுப்பில் கெவி்ன்ரூத்திற்கு ஆதரவாக ஓட்டுக்கள் கிடைத்ததால் ‌மீண்டும் பிரதமராக கெவின்ரூத் தேர்வு‌ செய்யப்பட்டார். கிலார்டு பதவி விலகுவதாக அறிவித்தார்.
ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்தல்
புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள கெவின்ரூத் (57) கூறுகையி்ல்இ ஆஸி.க்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்தல் நடைபெறும் என்றார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger