ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியையும் அரசையும் இரண்டாக பிரிப்பதற்கு சந்திரிக்கா அமைச்சர்களை தூண்டுகின்றார் – விமல்


முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்குவுக்கு ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியையும் தற்போதைய அரசையும் இரண்டாக பிரிப்பதற்கும் 13வது திருத்தத்தை துரும்பாகக் கொண்டு அரசில் உள்ள சில அமைச்சர்களை தூண்டிவிடுகின்றார்.
ஸ்ரீ.ல.சு. கட்சியை இரண்டாகப் பிரித்தது பின் சந்திரிக்காவின் மகன் விமுக்தியைக் கொண்டு அரசியல் நடாத்துவதற்காக அவர் முயல்கின்றார் என அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (26) அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளாரே கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
இலங்கை இந்தியா ஒப்பந்தம் கைச்சார்த்திடும் விடயத்தில் எதிராக இருந்தவர்கள் தற்பொழுது அதற்கு ஆதராவாக உள்ளார்கள். ராஜித்த ரேஜினோல் குரே போன்றோர்கள் சந்திரிகாவின் கணவரின் கட்சியான மகஜன கட்சியில் இருந்தவர்கள். அவர்கள் அன்றும் ஆதரவாக இருந்தார்கள் இன்றும் ஆதரவாகப் பேசுகின்றனர்.
ஆனால் செப்டம்பரில் தமிழ்த் தேசிய முன்னணியிக்கு வடக்கு மாகாணசபை ஆட்சி செல்வதற்கு முன் 13வது திருத்தத்தில் பொலிஸ் காணி அகற்றவேண்டும் அந்த நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. வடக்கில் எமது கட்சி போட்டியிடுவதில்லை.
இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் முதலில் மீறியது இந்தியாவே ஒப்பந்தம் கைச்சாத்திட்டு விடுதலைப்புலிகள் ஆயுதத்தை கீழே வைப்பார்கள் என்று சொல்லி இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திட்டது. ஓப்பந்தம் கைச்சார்த்திட்டு 5 நாட்கள் சொல்லவில்லை விடுதலைப்புலிகள் ஆயுதத்தை வைக்கவில்லை. இதனை மீறியது இந்தியாவே.
ஊடகவியலாளர் கேள்வி – ஜ.தே.கட்சி 13வது திருத்தத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ள ஆதரவு இல்லை என தெரிவித்துளார்களே ? ஐ.தே.கட்சி எதிர்காலத்தில் இணைந்து ரி.என்.ஏ யுடன் அரசியல் செய்வதற்காகவே உள்ளனர். அதனால் ரி.என்.ஏ வுக்கு ஆதரவாக ஐ.தே.கட்சி செயல்படுகின்றது.
ஊடகவியலாளர் – கேள்வி இந்தியா 13வது திருத்தத்தினை மேற்கொள்ளக்கூடாது என இலங்கை அரசுக்கு தெரிவித்தால் உங்களது நிலைப்பாடு என்ன?
இது இந்தியாவின் லோக சபை இல்லை இலங்கைப் பாராளுமன்றம்.
ஊடகவியளாளர் கேள்வி வாசுதேவ நானயக்கார 13ல் எவ்வித சொல்கின்றாரே ?
வாசுதேவ நாணயக்கார போன்றோர் ரீ.என்.ஏ ஆதரவாகப் பேசுகின்றனர். அவர்கள் யுத்தம் செய்யாமல் சமாதன செய்யச் சொன்னவர்கள். வட கிழக்கை இணைத்து சுயாட்சி முறை வழங்கச் சொன்னவர்தான வாசுதேவ நாணயக்கார போன்றோர்கள்.
ஆனால் ஐனாதிபதி தற்போது உள்ள ஆட்சியில் உள்ள சகல கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக்கொண்டு இத் திருத்தத்தை மேற்கொள்ளவே முயற்சிப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger