பொதுபல சேனாவுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் / மத அடிப்படை வாதத்திற்கு இடமில்லை -ஐ.தே.கட்சி / மிஹிந்தலைக்கு ரயில் சேவை

 

பொதுபல சேனாவுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்-
களுத்துறையில் மக்கோணா என்ற இடத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் பொதுபல சேனாவுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மக்கோணா லக்கல குமார கந்தையிலுள்ள தேவாலயத்துக்குரிய மாதா திருச்சொரூபத்திற்கு முன்னால் இருந்த சந்திரவட்டக்கல் வடிவத்திலான வாசற்படியை இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலர் அங்கிருந்து பலவந்தமாக அகற்றிச் சென்றுள்ளனர்.
அந்த சம்பவத்துக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் நேற்றுக்காலை முதல் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அந்தப் பிரதேசத்தில் நிலவிய பெரும் பதற்றம் காரணமாக பொலீஸ் உயரதிகாரிகளும் சிறப்பு அதிரடிப் படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் சந்திரவட்டக்கல்லை அகற்றியவர்கள் தேவாலய நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரிய பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத அடிப்படை வாதத்திற்கு இடமில்லை -ஐ.தே.கட்சி-
மத அடிப்படை வாதத்துக்கு சமூகத்தில் இடமளிக்க கூடாது என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், மத அடிப்படை வாதத்தை உருவாக்கி, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலைக்கு ரயில் சேவை- 
அநுராதபுரத்தின் மிஹிந்தலை பொசன் கொண்டாட்டங்களை முன்னிட்டு அங்கு செல்லும் பயணிகள் இலவசமாக பயணம் செய்ய நேற்று முதல் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரை ரயில் சேவையொன்றை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இந்த ரயில் சேவை நாளை திங்கட்கிழமை வரை நடாத்தப்படுமென திணைக்களம் தெரிவிக்கின்றது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger