வவு­னியா: போதை தலைக்கேற நீர்த்தாங்கியில் ஏறி நின்று சத்தமிட்ட பொலிஸ் / இலங்கையில் 1693பேர் எயிட்சினால் பாதிப்பு

 

வவு­னியா: போதை தலைக்கேற நீர்த்தாங்கியில் ஏறி நின்று சத்தமிட்டுக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்
வவு­னியா நக­ரி­லுள்ள நீர்த்­தாங்கி மீது மது போதையில் ஏறி நின்று சத்­த­மிட்டுக் கொண்­டி­ருந்­த­தாகக் கூறப்­படும் மாங்­குளம் பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
மாங்­குளம் பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த இந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் வவு­னியா நக­ருக்கு வந்து மது­வ­ருந்­திய பின்னர் போதையில் நீர்த்­தாங்கி மீதேறி சத்­த­மிட்டுக் கொண்­டி­ருந்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
ஒரு நபர் நீர்த்­தாங்கி மீதேறி சத்­த­மிட்டுக் கொண்­டி­ருந்­த­தாக வவு­னியா பொலிஸ் பொலிஸ் நிலை­யத்­துக்கு கிடைத்த தக­வ­லின்­படி பொலிஸார் அந்த இடத்­துக்கு விரைந்து மிகச் சிர­மத்­துடன் அந்த நபரை கீழே இறக்கி விசாரணை செய்த போது அவர் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரிய வந்துள்ளது.
இலங்கையில் 1693பேர் எயிட்சினால் பாதிப்பு-
இலங்கையில் இதுவரையில் எச். ஐ. வி. தொற்றுக்குள்ளானவர்களென்று அடையாளம் காணப்பட்டிருப்பவர்களின் தொகை ஆயிரத்து அறுநூற்று தொண்ணூற்று மூன்று பேராகும். இவ்வாண்டு கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையிலான கணக்கெடுப்பினடிப்படையில் இவ் எண்ணிக்கை தெரிய வந்துள்ளது.
இவ்வாறு, அம்பாறையின் சம்மாந்துறை அரசினர் மருத்துவமனை வைத்திய அதிகாரி எம். ஜே. எம். நவ்பல், மொனராகலையில் நடைபெற்ற செயலமர்வின் போது தெரிவித்துள்ளார். ஈ.பி.ஏ.ஐ.பி.பி.எப், ஐரோப்பியன் யூனியன் ஆகிய அமைப்புக்களின் பூரண அனுசரணையுடன் ஊவா சமூக வானொலி மற்றும் பிரதீபா மீடியா வலைப்பின்னல் ஆகியனவற்றினால், மேற்படி செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாலியல் மற்றும் இனப் பெருக்க சுகாதாரத்திற்கும், எச்.ஐ.விக்குமிடையில் இணைப்புக்களை பலப்படுத்தல் என்ற தலைப்பில் இடம்பெற்ற இச் செயலமர்வில் வைத்திய அதிகாரி எம். ஜே. எம். நவ்பல் தொடர்ந்து உரையாற்றுகையில், அடையாளம் காணப்பட்ட 1693 பேரில், 900 பேரே சிகிச்சைகளுக்கு உட்படுத்தப் பட்டு மருந்து வகைகளை பாவித்து வருகின்றனர். ஏனையவர்கள் தலை மறைவாகியுள்ளனர்.
பன்னிரண்டாயிரம் பேர் பாலியல் தொடர்பான நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. எச். ஐ. வி. தொற்றுதலுக்குள்ளானவர்களில் 59 சதம் இரண்டு வீதமானவர்கள் (59.2%) மேல் மாகாணத்திலேயே பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
அவ்வீதம் நாட்டின் ஏனைய மாகாணங்களில் குறைவடைந்து செல்வதுடன் ஊவா மாகாணத்தைப் பொறுத்தவரையில் இரண்டு வீதமாகக் குறைவடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.
அதே நிலையில் மேல் மாகாணத்தை தவிர்த்து, ஏனைய மாகாணங்களில் குறைவடைந்துள்ளமையானது, இம் மாகாணங்களின் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்கள் மேல் மாகாணத்தை நாடி, அம்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கலாமென்றும் கருதப்படுகின்றது.
தேசிய பாலியில் தொற்று நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டத்தினடிப்படையில் சேவையிலீடுபடுத் தப்பட்டிருக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்டு டொக்டர்கள் 112 பேரும், தாதிகள் 66 பேரும் சுகாதாரப் பரிசோதகர்கள் 36 பேருக்கு ஏனைய சுகாதார ஊழியர்கள் 116 பேருமாக நாநூறு பேரேயுள்ளனர். எமது நாட்டின் மொத்த சனத்தொகைக்கமைய இந் நாநூறு பேர் போதுமானவர்களல்லர்.
பாலியல் மற்றும் இனப்பெருக்கல் சுகாதாரத்தினை, அபிவிருத்தியில் ஒரு இலக்காகப் பாதுகாக்க வேண்டும். சுகாதார சேவை உரிமைகளை அணுக வாய்ப்புகள் உள்ளவர்களுக்கும், இல்லாத வர்களுக்குமிடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும்.
பெண்கள், சிறுமியர்கள் ஆகியோருக்கெதிரான பாகுபாட்டினை இல்லாதொழிக்க வேண்டும். பாலியல் இனப்பெருக்க சுகாதார உரிமைகள், மனித உரிமைகளென்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேலும் இளைஞர் சமூகம் தொடர்பான கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் மேற் கொள்ளும் போது, அச் சமூகத்தின் பங்களிப்புகளை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.
சுகாதார சேவையில் பாலியல் இனப்பெருக்க சேவைகளை, ஒருங்கிணைத்தலை வலுப்படுத்தியதாக வேண்டும். குடும்பத்திட்ட முறைமைகள் பாவிப்ப தற்கு தேவைகள் இருப்பினும், இதுவரை பாவிக்காத எண்ணிக்கையை சரி சமமாக குறைக்க வேண்டும்.
அனைவருக்கும் தமது வயதுக்கு ஏற்றவகையில் விரிவான பாலியல் சுகாதாரக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பற்ற கருச் சிதைவின் போது ஏற்படும் தாய் மரணங்களை குறைந்த பட்சம் 75 வீதத்தினாலாவது குறைப்பது அவசியமாகும்.
இவ் இலக்குகளை அடைவதற்கு அரசிடமிருந்து தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்வதில், உறுதியாக இருக்க வேண்டும். இலங்கையில் அடுத்து வரும் 2020ம் ஆண்டில் எமது நாட்டின் அனைவருக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் அமைய வேண்டும்.
எச். ஐ. வி. தொற்று தடுக்கப்படக் கூடியதொன்றாகும். தவறின் பாரதூரமான சமூக, பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதொன்றாகும்.
எமது நாட்டில் 1986 இல் முதலாவது எச். ஐ. வி. தொற்றுடையவர் கண்டுபிடிக்கப் பட்டாலும், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்திலேயே பேணப்பட்டு வந்துள்ளது.
 


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger