மன அழுத்தத்தை டெஸ்ட் பண்ண புது மெசின்- இன்றைக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ‘ஸ்ட்ரெஸ்’ எனப்படும் மன அழுத்தம் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். மனஅழுத்தம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலர் தற்கொலை வரை செல்கின்றனர்.
மனஅழுத்தம் இருக்கிறதா? இல்லையா என்று கூட பலரும் உணர்வதில்லை. எனவே ஸ்ட்ரெஸ் கணக்கிடும் கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளனர் அயர்லாந்து விஞ்ஞானிகள்.
இது சிறிய கீ செயின் வடிவில் உள்ளது. இதனை கையில் வைத்து அமுக்குவதன் மூலம் வியர்வை, ரத்த அழுத்ததை வைத்து எவ்வளவு ஸ்ட்ரெஸ் என ப்ளூடூத் மூலம் செல்போனுக்கு தகவல் சொல்லி விடும்.
பின்பு அதை கண்டு கொண்டு கோபத்தை குறைத்து கொள்ளவோ அல்லது மருத்துவம் செய்து கொள்ளலாம்.
அத்துடன் இதில் இந்த ஸ்ட்ரெஸ்ஸை எப்படி கையாளலாம் அதற்கு சில விளையாட்டையும் விளையாடினால் மனது இலவாகும் என கூறி அதையும் இந்த மெஷினோடு தருகின்றனர்.
இதன் விலை? 79 டாலர்கள் தான் செலவாகுமென்று தெரிவிக்கப்படுகிறது.
சீனப்பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்தது-அழகுக்கு அழகு சேர்க்கிறோம் என்ற பெயரில் செயற்கை மார்பக அறுவை சிகிச்சையை செய்துக் கொள்ளும் பெண்கள் பல்வேறு பக்க விளைவுகளுக்கு ஆளாகும் பல செய்திகளை நாம் படித்திருக்கிறோம். இந்த வரிசையில் தற்போது சீனாவின் பீஜிங் நகரை சேர்ந்த ஓர் இளம் பெண்ணும் தற்போது இணைந்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் தனது உடலழகை எடுப்பாக காட்டிக் கொள்வதற்காக செயற்கை மார்பகத்தை ஆபரேஷன் மூலம் இவர் பொருத்திக் கொண்டார்.
சமீபத்தில் ‘டிராகன் சம்மன்’ என்ற வீடியோ விளையாட்டை தனது ‘ஐ பாட்’டில் பதிவிறக்கம் செய்துக்கொண்ட இவர், புது மோகத்தில் இரவும் பகலும் அந்த விளையாட்டில் மூழ்கி திளைத்தார்.
விளையாட்டு ஆர்வத்தில் கவிழ்ந்து படுத்தபடி, சுமார் 4 மணி நேரம் ‘ஐ பாட்’டை இயக்கிக் கொண்டிருந்த இவருக்கு திடீரென்று மார்பகத்தின் உள்பகுதியில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்பட்டது.
இதனையடுத்து, ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பரிசோதித்தனர். பரிசோதனையில் அவரது செயற்கை மார்பத்தில் ஒன்று வெடித்து சிதறியதால் தான் அந்த பெண்ணுக்கு தாங்க முடியாத வலியும், எரிச்சலும் ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டது.
விலை குறைவு என்பதற்காக மலிவாக விற்கப்படும் செயற்கை மார்பகங்களை பொருத்திக் கொண்டதால் தொடர்ந்து 4 மணி நேரம் கவிழ்ந்து படுத்தபடி இருந்த அந்த பெண்ணின் உடல் எடையின் அழுத்தம் மார்பக பகுதியை பாதித்து செயற்கை மார்பகம் வெடித்திருக்கலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
அவசர ஆபரேஷன் மூலம் வெடித்த மார்பகம் அகற்றப்பட்ட அந்த பெண்ணுக்கு மீண்டும் மாற்று மார்பகம் பொருத்தப்பட்டதா? என்பது குறித்து தகவல் கூற டாக்டர்கள் மறுத்து விட்டனர்.
Post a Comment