பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர்-
நாயின் சாயல் சிறிதளவு இருந்ததாலும், நாய்கள் மீது கொண்ட தீரா காதலாலும் ஒரு பீரேசீலிய இளைஞன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை நிஜ நாய் போலவே மாற்றிக் கொண்ட விநோதம் நடந்துள்ளது.
நாயின் சாயல் சிறிதளவு இருந்ததாலும், நாய்கள் மீது கொண்ட தீரா காதலாலும் ஒரு பீரேசீலிய இளைஞன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை நிஜ நாய் போலவே மாற்றிக் கொண்ட விநோதம் நடந்துள்ளது.
பெயர் வெளியிடப்படாத பிரேசிலைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு மருத்துவர்கள், இறந்த நாயின் முகத்தைக் கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனராம்.
இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மருத்துவர்களுக்கு வழங்கியுள்ளாராம் அந்த இளைஞர்.
இறந்த நாய் ஒன்றின் காது, மூக்கு, வாய் மற்றும் புருவங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த இளைஞருக்கு பொருத்தியுள்ளார்களாம் மருத்துவர்கள்.
ஆபரேஷன் முடிவடைந்துள்ள நிலையில் அந்த இளைஞனை ‘நாய் மனிதன்’ என மக்கள் அழைக்கின்றனர்
பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான 3 ஆயிரம் டன் தரமற்ற அரிசி பறிமுதல்
பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 3 ஆயிரம் டன் வண்டு அரித்த அரிசியை மெக்சிக்கோ சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 3 ஆயிரம் டன் வண்டு அரித்த அரிசியை மெக்சிக்கோ சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
120 கண்டெய்னர்களில் அனுப்பப்பட்ட இந்த அரிசி உண்ண தகுதியற்றது என்று அறிவித்த சுங்கத்துறையினர் அவற்றை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புவதா அல்லது மெக்சிக்கோ கடல் பகுதியில் கொட்டி அழித்து விடுவதா? என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
உணவுப் பொருட்களை அரித்து பயன்படுத்த தகுதியற்றதாக்கி விடும் ‘கப்ரா’ வண்டுகள் சுமார் 2-3 மி.மீட்டர் அளவுடையவை ஆகும்.
இவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக பரவி உணவுப் பொருட்களை சேதப்படுத்தி விடும்.
எனவே, இதைப்போன்ற வண்டுகள் மெக்சிக்கோவின் சரக்கு பெட்டக துறைமுகத்துக்குள் பரவி விடாமல் இருக்க தற்போது தரமற்ற அரிசியை ஏற்றுமதி செய்திருக்கும் பாகிஸ்தான் நிறுவனத்தின் அனைத்து பெட்டகங்களையும் தீவிரமாக பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என சுங்கத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment