காரைதீவு, திருக்கோவில் பிராந்தியத்தில் மேற்குப் புறத்திலுள்ள சுமார் 4000 ஏக்கர் தமிழ் மக்களின் காணிகள் வனப்பாதுகாப்பு அதிகாரிகளால் சுவீகரிக்கப்படவுள்ளன. அதற்கான எல்லைக் கற்கள் கடந்த நான்கு தினங்க ளாக நடப்பட்டுவருகின்றன.
இந்த எல்லைக்கற்கள் பொத்துவில் தொடக்கம் சாகாமம் வரை நடப்பட்டுவருகிறது. பயிர்ச்செய்கைக்குள்ளாக்கப்பட்டுள்ள காணிகளுக்குள்ளாகவும் இக்கற்கள் நடப்பட்டுள்ளமை அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன.
தம்மிடம் இக்காணிகளுக்கான உறுதிகள் பெர்மிட்டுகள் இருக்கத்தக்கதாக இவ்வாறு அத்துமீறி பிரவேசித்து வன பரிபாலன திணைக்களத்திற்கான காணி என்று கூறி எல்லைக்கற்கள் நடுவது ஜனநாயகமா? என அம்மக்கள் கேட்கின்றனர்.
கஞ்சிகுடிச்சாறு கோமாரி ரூபஸ்குளம் சாகாமம் பெரிய திலாவை வடகண்டம் போன்ற பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக அமைந்த வயற்காணிகளில் ஏறக்குறைய 4000 ஏக்கர் அளவில் அரச காணி எனும் பேரில் வனப்பாதுகாப்பு அதிகாரிகளால் சுவீகரிக்கப்படவிருப்பது குறித்து மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
பிரஸ்தாப காணிகளில் குறிப்பிட்ட உரிமையாளர்கள் 1960 முதல் 1990 வரை பயிர்ச்செய்கையிலீடுபட்டுவந்தனர். பின்னர் யுத்தம் காரணமாக சில காலம் அப்பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்த காரணத்தினால் பயிர்ச்செய்கையிலீடுபட முடியவில்லை.
பின்பு சமாதான காலகட்டத்தில் மீண்டும் 2001 முதல் 2004 வரை பயிர்ச்செய்கையிலீடுபட்டனர்.தற்போதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் பயிர்ச்செய்கை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயிர்களுக்கூடாக எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ளமை அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment