13 +இல் பாரிய மாற்றங்களைத் தவித்தது ஆனால் இரு மாற்றங்கள் செய்யத் தவற வில்லை: சு.க



அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இரண்டு ஏற்பாடுகளை இரத்துசெய்யவேண்டும் என்ற உத்தியோகபூர்வ தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று புதன்கிழமை எடுத்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த விவகாரத்தில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இதன்பிரகாரம், 13 ஆவது திருத்தத்தில் இரண்டு ஏற்பாடுகள் அகற்றப்படவேண்டுமென இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாண சபைகள் இணைந்து தனி மாகாணசபையாக இயங்கமுடியும் என்ற ஏற்பாடு நீக்கப்படல் வேண்டும் என்பது அதில் ஒன்றாகும்.
மாகாண சபை அதிகாரத்தின் கீழுள்ள பொதுபட்டியலில் உள்ள விடயங்களை திருத்துவதற்கு சகல மாகாண சபைகளிலும் அங்கீகரிக்கவேண்டும் என்பதும் நீக்கப்படல் வேண்டும் என்பது மற்றொன்றாகும்.
ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள இந்த தீர்மானத்தை அரசாங்கத்தின் நிலைப்பாடாக ஆக்கிகொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
slfp_convention_1slfp_convention_1a
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger